செந்தில் பாலாஜியை தொடர்ந்து , அசோக் அமலாக்க துறையினரால் கைது

0
90
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்

பணமோசடி வழக்கில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கை அமலாக்க இயக்குனரகம் (ED) கைது செய்துள்ளது . முன்னதாக அமலாக்க துறையினர் அனுப்பிய பல சம்மன்களை அசோக் புறக்கணித்ததாகக் கூறப்பட்டதை அடுத்து இன்று அவர் கொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரணை நடத்திவரும் அமலாக்க பிரிவு காவல் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார்.

செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை  3000 பக்கம் கொண்ட  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில் அவரது சகோதரர் அசோக்கின் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது . இதுவரை இந்த மோசடி வழக்கின் குற்றப்பத்திரிகையில் செந்தில் பாலாஜியின் பெயர் மட்டுமே இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது .

கடந்த வியாழக்கிழமை ( ஆகஸ்ட் 10) அசோக்கின் மனைவி நிர்மலாவுக்குச் சொந்தமான, 30 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள கரூரில் அமைந்துள்ள 2.49 ஏக்கர் பரப்பளவில் அமையப்பட்டுள்ள சொத்துக்கள் குறித்து பல கட்ட சோதனைகள் மற்றும் விரிவான விசாரணைக்குப் பிறகு அமலாக்க துறையினர் முடக்கினர் .

முன்னதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் பணமோசடி வழக்கில் செந்தில் பாலாஜியை ஜூன் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது.

அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஊழல் செய்ததாக எழுந்த புகாரை அடுத்து அவர்மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர் .

நவம்பர் 2014 இல், தமிழ்நாடு பெருநகர போக்குவரத்துக் கழகம்   , ஓட்டுநர், நடத்துனர்கள்,  இளநிலைப் பொறியாளர், உதவிப் பொறியாளர்  உள்ளிட்ட பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்கான சுற்றறிக்கையை  வெளியிட்டது.

இந்த காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் 2014 டிசம்பரில் நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் பின்னர் வெளியிடப்பட்டது.

இந்த சூழ்நிலையில் தான் தேவசகாயம் என்ற நபர், தனது மகனுக்கு வேலை வாங்கித் தருவதற்காக போக்குவரத்து கழக நடத்துனர் ஒருவரிடம்  ரூ.2.6 லட்சம் கொடுத்ததாகவும், ஆனால் அவரது மகனுக்கு வேலை வழங்கப்படவில்லை என்று செந்தில் பாலாஜி , அவரது சகோதரர் அசோக் உள்ளிட்ட 10 பேர் மீது புகார் அளித்தார்.

\

மற்றொரு புகார்தாரரான கோபி நடத்துனர் பதவிக்கு விண்ணப்பித்ததாகவும் , கோபிக்கு பணி நியமனம் வழங்க செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோகன் மற்றும் கார்த்திக் உள்ளிட்டோர் கோபிக்கு பணி நியமனம் வழங்க ரூ.2.40 லட்சம் பெற்றதாகவும் ஆனால் தனக்கும் வேலை கிடைக்கப் பெறவில்லையென்று  காவல் ஆணையரிடம் 2016 ஆம் ஆண்டில் புகார் அளித்தார்.

போலீசார் தனது புகாரை பதிவு செய்யாததால், தனது புகாரை பதிவு செய்து விசாரிக்க போலீஸ் கமிஷனருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கோபி மனு தாக்கல் செய்தார்.

இந்த புகார்களின் அடிப்படையில் சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமாக பணமோசடி செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவரவே சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜி , அவரது சகோதரர் அசோக் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here