பறக்கும் படை பணம் பறிமுதல்… கதறி அழுத பஞ்சாபி பெண்!

2 Min Read
பஞ்சாபி பெண்

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் ஊட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தபோது சுற்றுலா வந்த பஞ்சாபி பெண் ஒருவர் பணத்தைத் திருப்பித் தருமாறு கண்ணீர் விட்டு கதறி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.பஞ்சாபி பெண் ஒருவர் தேர்தல் பறக்கும் படையினரிடம் பணத்தைத் திருப்பித் தருமாறு கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

- Advertisement -
Ad imageAd image

ஊட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் முறையான ஆவணங்கள் இன்றி ரூ. 50,000-க்கு மேல் கொண்டுவந்த சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து பணம் பறிமுதல் செய்தனர். அப்போது, பஞ்சாபி பெண் ஒருவர் பணத்தைத் திருப்பித் தருமாறு கண்ணீர் விட்டு கதறி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட மார்ச் 16-ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், அவர்களுடைய ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள் அளிப்பதை தடுக்கும் விதமாக தேர்தல் அலுவலர்கள், பறக்கும் படையினர், வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50,000-க்கு மேல் ரொக்கமாக பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், நீலகிரி மாவட்டம், குன்னூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் முறையான ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டுவரப்பட்ட பணத்தை சுற்றுலாப் பயணிகளிடமிருந்து தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அப்போது பணத்தைத் திருப்பித் தருமாறு கண்ணீர் விட்டு பஞ்சாபி பெண் அழுத வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

குடும்பத்துடன் ஊட்டிக்கு சுற்றுலா வந்திருந்த அந்த பெண், தேர்தல் பறக்கும் படையினரிடம் பணத்தை திருப்பித் தருமாறு கண்ணீர் வீட்டு அழுத காட்சி பார்ப்பவர்களின் மனதை உடையச் செய்துள்ளது.
இதனிடையே, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தேர்தல் நடத்தை விதிமுறையின் போது ரூ. 50,000-க்கு மேல் ரொக்கமாக எடுத்துச் செல்லக்கூடாது என்பது பொதுவான விதிதான் என்று அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.சுற்றுலா வரும் பயணிகள் மொத்தமாக பணம் எடுத்துக்கொண்டு வருகிறார்கள். அவர்களிடம் தேர்தல் பறக்கும்படையினர் கடுமையாக நடந்துகொள்ளக் கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Share This Article
Leave a review