டிரைவர் மனைவியை காரில் கடத்திய 5 பேர் கைது. பெண்ணை பத்திரமாக மீட்ட போலீசார்

1 Min Read
கைது செய்யப்பட்டவர்கள்

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியை சேர்ந்தவர்  டிரைவர்அஜ்மீர் ஹாஜா செரிப் . இவர் திருநெல்வேலியில் உள்ள ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை பார்த்து வந்தார். அப்போது இவருக்கும் அந்த நிறுவனத்தை நடத்தி வரும் திருச்சி எல்.ஐ.சி காலனி கே.கே.நகரை சேர்ந்த வேதகிரி என்ற வினோத்  என்பவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் அந்த வேலையை விட்டுவிட்டு தற்போது வேறு நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்அஜ்மீர் ஹாஜா செரிப் .
இந்த சூழ்நிலையில் வினோத் தனது சகோதரி பிரீத்தி , திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் , திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சமாதானபுரத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் , திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த ராஜா  ஆகியோருடன் ஒரு காரில் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள  அந்த டிரைவர் வீட்டிற்கு வந்தார். ஆனால் வீட்டில் அவர் இல்லை.
இதனால் வலுக்கட்டாயமாக  அவரது மனைவியை 5 பேர் சேர்ந்து காரில் கடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த  உடனே தமிழ் பல்கலைக்கழக போலீசாருக்கு புகார் கொடுத்ததையடுத்து .  போலீசார் உடனடியாக போலீஸ் வாகனத்தில் அந்த காரை பின் தொடர்ந்தனர்.
தஞ்சை மாவட்டம் புதுக்குடி  எல்லையில் வைத்து காரை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வினோத், பிரீத்தி, மாரியப்பன், கோபாலகிருஷ்ணன், ராஜா ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் வினோத்துக்கும், தஞ்சை டிரைவருக்கும் இடையே ஏற்கனவே முன்னோரதம் இருந்துள்ளது. அதனை மனதில் வைத்துக் கொண்டு டிரைவரின் மனைவியை காரில் கடத்தி சென்றது தெரியவந்தது.

- Advertisement -
Ad imageAd image
Share This Article
Leave a review