தஞ்சை கீழவாசலில் தற்காலிக மீன் மார்க்கெட் உள்ளது. இந்த மீன் மார்க்கெட்டுக்கு எதிரில் உள்ள டாஸ்மாக் பாரில். கடந்த 21 ஆம் தேதி காலை 11 மணிக்கு மீன் வியாபாரி குப்புசாமி மற்றும் விவேக் ஆகியோர் மது குடித்து மயங்கி விழுந்து இறந்தனர்.அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்திருந்ததும் பிரேத பரிசோதையில் தெரியவந்தது.
இச்சம்பம் தொடர்பாக தஞ்சை நகர போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையில் இறந்த குப்புசாமியின் மனைவி காஞ்சனா தேவி தனது கணவர் இறப்பு குறித்து சி .பி .சி .ஐ. டி விசாரணை நடத்த வேண்டும் என கடந்த சில நாட்கள் முன்பு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தார்.
இருப்பினும் இச்சம்பவம் நடந்து பத்து நாட்கள் மேலாகியும் இதில் இருவரும் குடித்த மதுவில் சயனைடு எப்படி கலக்கப்பட்டது? என இதுவரை போலீசாருக்கு துப்பு கிடைக்காமல், விசாரணையில் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆரம்பத்தில் பாரில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா கடந்த மூன்று மாதங்களாக பழுதாகி உள்ளதாக, பார் உரிமையாளர்களும் பணியாளர்களும் கூறியிருந்தனர்.
இருப்பினும் போலீசாருக்கு சந்தை ஏற்பட்ட நிலையில் கிழக்கு காவல் நிலைய போலீசார் சிறப்பு தனிப்படை போலீசார்6 மற்றும் கலால் தாசில்தார் ஆகியோர் பாரில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் ஹார்ட் டிஸ்கை கைப்பற்றி ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்.