- திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் வங்க கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை மேலும் மீன்பிடி படகுகளை பாதுகாப்பான இடங்களில் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் மீனவர்களின் வலைகள் கரைகளில் நிறுத்தப்பட்டுள்ளது. பழவேற்காடு மீன் மார்க்கெட்டுக்கு இதன் காரணமாக மீன் வரத்து குறைந்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று உருவாக வாய்ப்பு உள்ளது.
இது தொடர்ந்து வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை, நாளை மறுதினம் புதுச்சேரி, தமிழகத்தின் வட மாவட்டங்கள், தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளில் நிலவக்கூடும். இதன் காரணமாக இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/leave-schools-due-to-rain-do-not-conduct-online-classes-minister-anbil-mahesh-request/
இந்த நிலையில் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.