சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த மானை தீயணைப்புத்துறையினர் மீட்டு அரை மணி நேரம் கழித்து வந்த சிவகிரி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

வன விலங்குகள் ஊர் பகுதிகளுக்கு அடிக்கடி வருவது தற்போது தொடர் கதையாகி வருகிறது.கோவை பகுதிகளில் காட்டு யானைகள் தற்போது ஊருக்குள் வருவதை போல தமிழகத்தின் மாற்ற பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வீட்டில் வளர்க்கும் விலங்குகளை வேட்டையாடி வருகின்றன.பெரும்பாலும் வனப்பகுதிகளில் வன விலங்குகளுக்கு தேவையான உணவுப்பொருள்கள் கிடைப்பதில்லை உணவு தேடி விலங்குகள் ஊர் பகுதிகளிக்கு வருவது வழக்கமாகிவிட்டது.அப்படி ஊருக்குள் வந்த மான் ஒன்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூரில் தர்மராஜ் என்பருக்கு சொந்தமான இருபது அடி ஆழக்கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடி தண்ணீரில் தத்தளித்து கொண்டிருப்பதாக பார்த்த அந்த பகுதி மக்கள் சங்கரன்கோவில் தீயனைப்புத்துறையை சேர்ந்த நிலைய அலுவலர் விஜயனுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த மானை வலை விரித்து கயிறு கட்டி பத்திரமாக உயிருடன் மீட்டனர்.

பின்னர் மானை உயிருடன் மீட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் வனத்துறையினர் வரவில்லை, அரை மணி நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகிரி வனச்சரகர் மௌனிகா தலைமையின் கீழ் செயல்படும் வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர்கள வந்த சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனைதொடர்ந்து தீயணைப்புத்துறையினர் கிணற்றில் மீட்ட மானை சிவகிரி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.அதன் பின்னர் வனத்துறையினர் வனப்பகுதியில் விட்டனர்.
வனத்தையும், வன உயிரினங்களையும் பாதுகாக்க உருவாக்கப்பட்ட வனத்துறை வன உயிரினம் ஒன்று உயிருக்கு போராடி கொண்டிருக்கும் போது அதனை மீட்க நடவடிக்கை எடுக்காமல் தீயணைப்புத்துறையினர் மீட்டு அரை மணி நேரம் கழித்து மானை பெற்று செல்ல வந்த சிவகிரி வனத்துறையினர் மீது தமிழ்நாடு அரசு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்..