நெல்லை மாவட்டம் வன்னி கொணந்தல் பகுதியை சேர்ந்தவர் முருகன் கூலி வேலை பார்த்து வரும் இவருக்கு சமரசச் செல்வி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர் கடந்த 2019 ஆம் ஆண்டு சமரசச் செல்விக்கு சொந்தமான குடும்ப இடத்தில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் புதிதாக வீடு கட்டி உள்ளார்.அப்போதிலிருந்தே வீட்டுக்கான மின் இணைப்பு கேட்டு 2019 ஆம் ஆண்டு மனுசெய்து நிலையில் தற்போது வரை மின் இணைப்பு வழங்கப்படாமல் இருந்து வருகிறது.

மின்சார வாரியம்.பலமுறை மின்வாரியம் மற்றும் வருவாய் துறை உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின் இணைப்பு வேண்டி புகார் அளித்துள்ளார்.முருகனின் மூத்த மகள் பத்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில் வீட்டில் மின்சாரம் இல்லாததால் படிப்பை தொடர முடியாத நிலை இருந்து வருவதாகவும் நன்றாக படிக்கும் நிலையில் மகள் இருந்தும் படிப்பிற்கு உதவ முடியாத நிலையில் நாங்கள் இருப்பதாக வேதனையுடன் முருகன் மற்றும் மனைவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குடும்பத்துடன் மனு அளித்த நிலையில் தற்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லை எனக் கூறியும் கடந்த சில நாட்களாக வீட்டுக்குள் விஷ ஜந்துக்கள் மற்றும் பாம்புகள் வருவதாகவும் தெரிவித்ததுடன் நேற்றைய தினம் வீட்டிற்குள் புகுந்த மூன்றடி நீளம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்புடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த சமரசச் செல்வியால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் அவர் கையில் இருந்த பாம்பை அப்புறப்படுத்தி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க ஏற்பாடு செய்தனர்.
மின் இணைப்பு கேட்டு இன்னமும் போராட வேண்டிய நிலை இருப்பதற்கு இதுவே உதாரணம்.இனியாவது மின்சாரம் கிடைக்குமா?பார்ப்போம்.