கும்பக்கோணத்தின் சிந்தன் நகர் புதிய ரயில்வே சாலையில் அமைந்துள்ள தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தில் சிந்தன் நகர் புதிய ரயில்வே சாலையில் அமைந்துள்ள தி சென்னை சில்க்ஸ்
7 மாடிகள் கொண்ட இந்த துணிக்கடையில் இங்கு 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று தினத்தை முன்னிட்டு மற்றும் ஆடி சிறப்பு தள்ளுபடி அறிவித்திருந்ததால் ஏராளமானோர் துணிகளை வாங்குவதற்காக அங்கு குவிந்திருந்தனர். இந்நிலையில் இரவு 7 மணி அளவில் அந்த நிறுவனத்தின் முகப்பு பகுதியில் புகை எழும்பியது. சாலை நின்றவர்கள் நிறுவன ஊழியரிடம் தெரிவித்ததையொட்டி, கடை ஊழியர்கள் மற்றும் உள்ளே இருந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி சாலையில் ஓடினர். கடை ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 3 தீயணைப்பு வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். 1 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேற்கு காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை செய்ததில் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களும் மற்றும் மின் சாதனங்களால் தீ பரவி இருக்கலாம் என்று தெரிவித்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 50 அடி உயரத்திற்கு மல மல என தீ பரவியதால் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு புகை மூட்டமாக காட்சியளித்தது. இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.