பெரும்பாலும் அரசு பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் போதும் புறவழிச்சாலைகளில் செல்லும் போது பேருந்துகள் பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தாமல் செல்லுவது தான் வழக்கம் இதனால் பயனிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர் இதனை சரி செய்ய என்ன செய்யலாம் என யோசிக்கும் போது தான் இப்படி ஒரு செயல் நடைபெற்றது.
கோவை மாவட்டத்தின் அருகே கருமத்தம்பட்டி என்னும் கிராமத்தில் பேருந்து நிற்கும் இடங்களில் நிற்காமல் போனதனால் ஊர் பொதுமக்கள் அனைவரும் நிறுத்தி பிடித்தனர். பின்பு அப்பேருந்தை மடக்கி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் பிறகு கோவை அருகே பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்ற இரண்டு அரசு பேருந்துகளை பொதுமக்கள் நிறுத்த, மோட்டார் வாகன ஆய்வாளரிடம் புகார் அளித்தனர். மோட்டார் வாகன ஆய்வாளர் நடத்துனரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். இது தொடர்பான செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும் கருமத்தம்பட்டி நால்ரோடு பேருந்து நிறுத்தத்திற்கு வந்து பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆனாலும் பெரும்பாலான நேரங்களில் பேருந்துகள் கருமத்தம்பட்டி நால்ரோடு பேருந்து நிறுத்தத்திற்கு வராமல், மேம்பாலத்தில் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் சென்று நெடுஞ்சாலையிலேயே பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றனர்.

ஒரு சில பேருந்துகள் கருமத்தம்பட்டியில் நிற்காது என்று கூறி பயணிகளை ஏற்ற மறுத்து வருவதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் சூலூர் வட்டார போக்குவத்து அதிகாரி சண்முகசுந்தரம் என்பவர் கருமத்தம்பட்டி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருப்பூரில் இருந்து கோவை நோக்கி வந்த 2 அரசு பேருந்துகள் கருமத்தம்பட்டி நால்ரோடு பேருந்து நிறுத்தத்திற்கு வராமல் மேம்பாலத்தின் வழியாக சுமார் 1 கிலோமீட்டர் தூரம் தள்ளிச்சென்று பயணிகளை நெடுஞ்சாலையில் இறக்கி விட்டது தெரியவந்தது.இதனால் பொதுமக்கள் கடும் கோபத்திற்கு ஆளானர்கள்.
உடனே சம்பந்தப்பட்ட அரசு பேருந்துகளை பொதுமக்கள் நிறுத்தி ஓட்டுனர் மற்றும் நடத்துநருக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் அபராதம் விதித்தார். மேலும் தொடர்ந்து அத்துமீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.பின்பு மோட்டார் வாகன ஆய்வாளர் அரசு பேருந்து நடத்துனரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி எச்சரிக்கை விடுத்தார். அதன் செல்போன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.