மாவட்டத்திற்கு வழங்கப்படும் நிதி விவரங்கள் மத்திய அரசால் பராமரிக்கப்படுவதில்லை!

1 Min Read
சாத்வி நிரஞ்சன் ஜோதி

பிரதமரின்  கிராம சாலைகள் திட்டத்தை (பி.எம்.ஜி.எஸ்.ஒய்)  செயல்படுத்துவதற்காக மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு / விடுவிப்பு என்பது மாநிலத்திலிருந்து பெறப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில் செய்யப்படுகிறது. கைவசம் உள்ள பணிகள், மாநிலத்தின் செயலாக்க திறன் மற்றும் அதனுடன் செலவிடப்படாத நிதி ஆகியவற்றையும் இது  பொறுத்தது.

- Advertisement -
Ad imageAd image

பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான நிதி, அமைச்சகத்தால் மாநிலம் முழுமைக்கும் விடுவிக்கப்படுகிறது. மாவட்ட அளவில் உள்ள திட்ட செயலாக்க அலகுகளுக்கு (பி.ஐ.யூ) செய்ய வேண்டிய செலவினங்களைப் பொறுத்து அந்தந்த மாநிலங்களால் மேலும் நிதி விடுவிக்கப்படுகிறது.

20.07.2023 நிலவரப்படி, மஹாராஷ்டிரா மாநிலத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தை செயல்படுத்துவதற்காக செலவிடப்படாமல் ரூ.747.68 கோடி நிலுவையில் உள்ளது. ஒரு மாநிலத்தின் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்திற்கு வழங்கப்படும் நிதியின் விவரங்கள் மத்திய அரசால் பராமரிக்கப்படுவதில்லை. பி.எம்.ஜி.எஸ்.ஒய் திட்டத்தின் கீழ்  கிராம பஞ்சாயத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

மாநில அரசிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, கொன்ஷி – தபில் சாலை பி.எம்.ஜி.எஸ்.ஒய் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படவில்லை.

இத்தகவலை மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a review