தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார் ? டெல்லியில் 2 மணி நேரம் நடைபெற்ற , ஆலோசனை கூட்டம் !

3 Min Read
சைலேந்திரபாபு-ஷங்கர் ஜிவால்-சஞ்சய் அரோரா

தமிழ்நாட்டின் அடுத்த தலைமை செயலாளர் , டி ஜி பி யார் என்று தேர்வு செய்வதில் , கடும் போட்டி நிலவி வருகிறது .

10 வருட காத்திருப்புக்கு பின்பு 2021 -ம் ஆண்டு சட்டசபை தேர்தலில்  ஆட்சியை பிடித்த திமுக அரசு ,  1987 ம் ஆண்டில் ஐ.பி.எஸ். முடித்த சைலேந்திரபாபுவை ஆட்சி பொறுப்பேற்ற அடுத்த மாதமே தமிழநாட்டின் காவல் துறை தலைவராக (டி ஜி பி)  நியமித்தது .

- Advertisement -
Ad imageAd image

வயது மூப்பு காரணமாக சைலேந்திரபாபுவின் பதவி காலம் இந்த மாதம் (ஜூன்) 30ம் தேதியுடன் நிறைவு பெறுவதால், அடுத்த டி ஜி பி – யை தேர்ந்தெடுக்கும் பணியில் முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறது .

ஷங்கர் ஜிவால்-சஞ்சய் அரோரா

தமிழ் நாட்டின் அடுத்த டி ஜி பி யாராக இருக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அணைத்து தரப்பு மக்களிடம் நிலவி வரும் வேலையில் , டி ஜி பி பதவிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 13 ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பெயர்கள் தகுதி பட்டியலில் இடம் பிடித்துள்ளது .

இதில் 1990-ம் ஆண்டு பேட்ச்யை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் சஞ்சய் அரோரா, பிகே ரவி,  ஷங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன், ஆபாஷ் குமார் ஆகியோரும்  1991-ம் ஆண்டு பேட்ச்யை சேர்ந்த அமரேஷ் பூஜாரி ஆகியோர் தமிழ் நாடு டி ஜி பி பதவிக்கான போட்டியில் முன்னிலையில் உள்ளனர்.

தமிழ்நாட்டின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சய் அரோரா தமிழ்நாடு டி ஜி பி பதவிக்கு விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் , தமிழ்நாடு காவல்துறை தலைவர் பதவி , ஷங்கர் ஜிவாலுக்கு கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது .

சைலேந்திரபாபு

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி மாநிலத்தின் புதிய டி.ஜி.பி. தேர்ந்தெடுக்கும் போது மத்திய குடிமைப்பணிகள் ஆணையத்தின் (யு.பி.எஸ்.சி.) ஆலோசனை பெற வேண்டும் . இதன்படி மாநிலத்தின் டி.ஜி.பி பதவிக்கு தகுதியானவர்களின் பட்டியலை மாநில அரசு, குடிமைப்பணிகள் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கும்.

மாநில அரசு அனுப்பி வாய்த்த பட்டியலிலிருந்து,  குடிமைப்பணிகள் ஆணையம் 3 பேரை தேர்வு செய்து மாநில அரசுக்கு அனுப்பும். இதிலிருந்து  ஒருவரை டி.ஜி.பி. யாக மாநில அரசு நியமிக்கும் .

சுப்ரீம் கோர்ட்டு மேற்கோள்களின்படி தமிழ்நாடு அரசு சார்பில் தகுதி பாட்டியல் நேற்று டெல்லியிலுள்ள குடிமைப்பணிகள் ஆணையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு  , இதுகுறித்து 2 மணி நேரம் ஆலோசனை நடத்தப்பட்டது .

உள்துறை அமைச்சரவை அதிகாரிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தற்போதைய டி.ஜி.பி. சைலேந்திரபாபு , தலைமைச்செயலாளர் இறையன்பு மற்றும் உள்துறை செயலாளர் அமுதா ஆகியோர் பங்கேற்றனர்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்த ஆலசோனை கூட்டத்தை தொடர்ந்து இன்னும் ஓரிரு நாட்களில்  குடிமைப்பணிகள் ஆணையம் 3 தகுதியான அதிகாரிகளின் பெயரை தமிழ் நாடு அரசுக்கு பரிந்துரை செய்யும் என்று எதிர்பார்க்க படுகிறது . இதற்கு பின்னரே தமிழ் நாட்டின் அடுத்த காவல் துறை டி.ஜி.பி. யார் என்பது தெரியவரும் , என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .

இறையன்பு ஐ.ஏ.எஸ்

அடுத்த தலைமை செயலாளர் யார் ?

2021 ம் ஆண்டில் ஆட்சி பொறுப்பை  கைப்பற்றிய ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சைலேந்திரபாபுவை போலவே , இறையன்பு ஐ.ஏ.எஸ். யை தலைமை செயலாளராக நியமித்தது . இவரது பதவி காலமும் வயது மூப்பின் காரணமாக வரும் ஜூன் மாதம் 30 ம் தேதியுடன் நிறைவடைவதால் . தமிழ் நாட்டின் அடுத்த தலைமை செயலாளர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது .

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான ஹன்ஸ் ராஜ் வர்மா, ஷிவ்தாஸ் மீனா, என் முருகானந்தம், அதுல்யா மிஸ்ரா, பனீந்திர ரெட்டி, விக்ரம் கபூர், எஸ்கே பிரபாகர், எஸ் கிருஷ்ணன் ஆகியோர் அடுத்த தலைமை செயலாளருக்கான போட்டியில் முன்னணியில் உள்ளனர்.

Share This Article
Leave a review