பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ரூ.500 அபராதம் விதித்து குற்றவையில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணன் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசிற்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.20,500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த 16ஆம் தேதி தீர்ப்பளித்தது.

ராஜேஷ்தாசிற்கு உடந்தையாக இருந்து புகார் கொடுக்க சென்ற பெண் எஸ்பியை வழிமறித்து தடுத்து நிறுத்திய குற்றத்திற்காக செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
தனக்கு ரூ.500 அபராதம் விதித்து வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரணைக்கு எடுத்து கொள்வது குறித்து இன்றோ அல்லது வரும் திங்களன்றோ விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா உத்தரவு பிறப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.