தமிழக-கேரள எல்லையில் புளியரை சோதனைச்சாவடியில் பணி முடித்துச் சென்ற போக்குவரத்து பெண் இன்ஸ்பெக்டர் காரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.2.76 லட்சம் பறிமுதல் செய்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ளது புளியரை. இது தமிழக – கேரளா எல்லையில் உள்ள பகுதியாகும். இரு மாநில எல்லை பகுதி என்பதால், தினமும் ஏராளமான வாகனங்கள் கேரளாவுக்கு சென்று வருகின்றன. எனவே, புளியரை மோட்டார் வாகன சோதனை சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சோதனைச்சாவடியில், லாரி டிரைவர்களிடம் லஞ்சம் வாங்குவதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்திருக்கிறது.. அதனால், தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சாதாரன உடையில் ரகசியமாக நின்றிருந்தனர்.

நேற்றுமுன்தினம், விடிகாலை முதலே, புளியரை செக்போஸ்ட் அருகிலேயே லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்திருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அன்றைய தினம், மோட்டார் வாகன ஆய்வாளரான பிரேமா ஞானகுமாரி என்பவர் நைட் டியூட்டியில் ஈடுபட்டிருந்தார். ஆனால், அவருக்குகூட போலீசார் இப்படி கண்காணிப்பது தெரியாது. இந்நிலையில், மறுநாள் காலை பணியை முடித்துக்கொண்டு, 8.30 மணிக்கு, தன்னுடைய கணவரான ஷாட்சன் என்பவருடன் வீட்டிற்கு காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது, கற்குடி-தவணைவிலக்கு பகுதியில், திடீரென அந்த காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள்.
அப்போது காருக்குள் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையும் மேற்கொண்டனர். பிரேமா ஞானகுமாரி, கையில் வைத்திருந்த ஹேண்ட்பேக்கையும், இன்ஸ்பெக்டர் வாங்கி சோதனை செய்தார். அதில், கட்டுக்கட்டாக பணத்தை இருப்பதை பார்த்து அதிர்ந்தார்.

அந்த ஹேண்ட்பேக்கில் மொத்தம் ரூ.2,76,400 பணம் இருந்திருக்கிறது. பிறகு, பிரேமா ஞானகுமாரியை, மறுபடியும் சோதனை சாவடிக்கு அழைத்து சென்று விசாரணையை ஆரம்பித்தனர். அப்போதுதான் அது, கனரக லாரி ஓட்டுநர்கள், சரக்கு வாகன ஓட்டுநர்கள் என ஏகப்பட்ட வாகன ஓட்டிகளிடம் லஞ்சமாக வாங்கிய பணம் என்பது தெரியவந்தது.,. அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார், பெண் அதிகாரி, பிரேமா ஞானகுமாரியையும் கைது செய்துள்ளனர்.
பெண் மோட்டார் வாகன ஆய்வாளர், இப்படி கையும் களவுமாக இரண்டரை லட்ச ரூபாய் பணத்துடன் சிக்கியது, அதிர்ச்சியை தென்காசி மாவட்டத்தில்,ஏற்படுத்தியது. கைதான பிரேமா ஞான குமாரிக்கு 58 வயதாகிறது.. கடந்த 3 நாட்களாகவே, இந்த செக்போஸ்ட்டில் இருந்திருக்கிறார் பிரேமா ஞானகுமார். அப்படியானால், அது 3 நாள் வசூலான லஞ்சப்பணமா? அல்லது வேறு ஏதாவது பணம் வைத்திருந்தாரா? என்ற சந்தேகம் கிளம்பி உள்ளது.தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.