ஒசூர் அருகே மின் மோட்டர் ஒயரை கடித்த 8 வயது பெண் யானை உயிரிழப்பு.அதிமுக முன்னாள் நகர செயலாளரிடம் வனத்துறை விசாரணை.

2 Min Read
உயிரிழந்த யானை

கடந்த சில மாதங்களாக வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதும்,குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளை சேதப்படுத்தி வருவதையும் பார்த்து வருகிறோம்.கோவை,கிருஷ்ணகிரி,ஓசூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து சேதப்படுத்தி வருவதையும் அறிந்து வருகிரோம்.சில இடங்களில் விளை நிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது.இந்த நிலையில் தான் ஓசூர் அருகே ஒரு காட்டு யானை உயிரிழந்துள்ளது.இந்த நிலையில் யானை உயிரிழப்பு காரணமாக வனத்துறையினருக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டு வருகிறது.

- Advertisement -
Ad imageAd image
யானை உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நேற்று இரவு மின் மோட்டார் ஒயரை கடித்த பெண் காட்டு யானை ஒன்று பரிதாபமாக பலியானது.கர்நாடக மாநிலம் பன்னார் கட்டா வனப்பகுதிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கடந்த வாரம் தமிழக வனப்பகுதியில் நுழைந்துள்ளது, ஜவளகிரியாக வழியாக வந்த யானை கூட்டங்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தேன்கனிக்கோட்டை ஊடேதுர்க்கம் ஓசூர் வனப்பகுதியில் தஞ்சமடைந்து இரவு நேரங்களில் வெளியேறி அருகே உள்ள விவசாயத் தோட்டங்களில் உள்ள நெல், ராகி, காய்கறி தோட்டங்களை சேதப்படுத்தி விட்டு மீண்டும் அதிகாலை நேரங்களில் மீண்டும் வனப்பகுதிக்கு சென்று விடும்.

உயிரிழந்த யானை

இதுபோல் நொகனூர் வனப் பகுதியில் இருந்து நேற்றிரவு வெளியேறிய பத்துக்கும் மேற்ப்பட்ட யானைக் கூட்டங்கள் தாவரகரை கிராம பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களை சேதப்படுத்தியது, அப்பகுதியில் ஓசூர் முன்னாள் நகர செயலாளர் தற்போது அதிமுக மாமன்ற உறுப்பினரான பால் நாராயணன் என்பவர் அங்கு கோழி பண்ணை ஒன்று அமைத்து தோட்டத்தில் ஆழ்துளை கிணற்றுக்கு மின்சார ஒயரை வெளி பகுதியில் எவ்வித பாதுகாப்பு இன்றி போடப்பட்டுள்ளார், இவ்வாறு போடப்பட்டுள்ள ஒயரை நேற்று இரவு வந்த யானைக் கூட்டங்களில் ஒன்று சுமார் எட்டு வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒயரை கடித்து பரிதாபமாக உயிரிழந்தது.

மின் மோட்டருக்கு செல்லக்கூடிய ஒயர் கம்பத்தின் வாயிலாகவோ அல்லது பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்தால் இது போல் வனவிலங்குகள் உயிரிழப்பது தவிர்க்கப்பட்டிருக்கலாம் என அப்பகுதி கிராம மக்கள் தெரிவித்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் கோழி பண்ணை உரிமையாளர் பால் நாராயணன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This Article
Leave a review