கறி குழம்பு சாப்பிட்ட தந்தைக்கு கத்திக்குத்து. தப்பி ஓடிய மகன் தலைமறைவு

2 Min Read
காயத்துடன்

கும்பகோணம் அருகே மேலவிசலூரில் மகன் சாப்பிட வரும் முன்னரே, கறிக்குழம்பை தந்தை சாப்பிட்டு காலி செய்ததால், ஆத்திரத்தில், தந்தையை முதுகில் கத்தியால் குத்தியதில், ஒரு பகுதி கத்தி முறிந்து முதுகில் சிக்கி கொண்ட பரிதாபம்.

- Advertisement -
Ad imageAd image

கும்பகோணத்தில் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தந்தை மோகன்தாஸ் (60) அனுப்பி வைப்பு. கத்தியால் குத்திய மகன் இராமச்சந்திரன் (20) தப்பியோடி தலைமறைவு. இது குறித்து நாச்சியார்கோயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தப்பியோடி தலைமறைவான இராமச்சந்திரனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கறி குழம்பு விவகாரத்தில் மகனே தந்தையை கத்தியால் குத்திய சம்பவம் மேலவிசலூர் கிராமத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் அருகே நாச்சியார்கோயில் காவல் சரகம் மேலவிசலூர் கிராமம் காந்திநகரில் வசிப்பவர் மோகன்தாஸ் (60) இவரது மகன் இராமச்சந்திரன் (20) இவருக்கு திருமணமாகி விட்டது, இதனால், தனக்கு தனி வீடு வேண்டும் என தந்தையுடன் அடிக்கடி இராமச்சந்திரன் தகராறு செய்து வந்துள்ளார் இந்நிலையில், வீட்டில் நேற்று கறி குழம்பு சாப்பாடு தயார் செய்திருந்த போது, அதனை மகன் வரும் முன்பே மோகன்தாஸ் சாப்பிட்டதாக தெரிகிறது,

ஏற்கனவே தந்தையுடன் இருந்த முன்கோபத்துடன், கறிக்குழம்பு காலியானது தெரிந்ததும், ஆத்திரமுற்ற இராமச்சந்திரன், மோகன்தாஸை தந்தை என்றும் பாராமல், முதுகில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் கத்தி முறிந்து ஒருபகுதி முதுகிலேயே சிக்கிக் கொண்டது இதனால் அதிர்ச்சியடைந்த மகன் இராமச்சந்திரன் தப்பியோடி தலைமறைவாகி விட்டார். படுகாயமுற்ற மோகன்தாஸ் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவர்கள் பரிசோதித்ததில், கத்தியை அறுவை சிகிச்சை செய்து தான் அகற்ற முடியும் என்பதால், முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, அவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து நாச்சியார்கோயில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடி தலைமறைவாகவுள்ள இராமச்சந்திரனை தீவிரமாக தேடி வருகின்றனர் கறி குழம்பு காலியான விவகாரத்தில், பெற்ற மகனே, தந்தை என்று பாராமல் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் மேலவிசலூர் கிராமத்தில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a review