குறுவை நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை..!

2 Min Read
விவசாயிகள்

நாகை மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அகர ஒரத்தூரில் நேரடி கொள்முதல் நிலையம் திறந்த மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

- Advertisement -
Ad imageAd image

பின்பு விட்டு விட்டு பெய்யும் மழையின் காரணமாக 22 சதவீதம் ஈரப்பதத்துடன் குறுவை நெல்லை கொள்முதல் செய்ய கோரிக்கை. நேரடி நெற்கள் முதல் நிலையம், பூஜை, குறுவை நெல் மூட்டைகள், விவசாயிகள்.

நெல் மூட்டைகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மற்றும் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் நேற்று முன்தினம் கனமழையும் மிதமான மழையும் விட்டுவிட்டு பெய்தது.வானிலை ஆய்வு மையம் கூறிய படி அந்தந்த பகுதிகளில் மிதமான மற்றும் கனமழை பெய்தலில் விவசாயிகளில் அறுவடை செய்த நெல் மூட்டைகள் நனைந்தன.

நெல் மூட்டைகள்

குறிப்பாக அந்தந்த பகுதிகள் நாகை, நாகூர், தேவங்குடி, திட்டச்சேரி, சிக்கல், அகர ஒரத்தூர், ஒரத்தூர், வேர்க்குடி உள்ளிட்ட பல்வேறு பெய்த கன மழை காரணமாக ஒரத்தூர், அகர ஒரத்தூர், வேர்க்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட குறுவை 1000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாதிப்புக்கு உள்ளானது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.

கடந்த 10 நாட்களாகவே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள்,கோரிக்கை விடுத்த நிலையில் மாவட்ட நிர்வாக ஆய்வாளர்கள் செவி சாய்க்காதன் காரணமாகவே தங்களது நெல் மூட்டைகள் நனைந்தது என குற்றம் சாட்டிய விவசாயிகள் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு மீண்டும் நேற்று முன்தினம் கோரிக்கை விடுத்தையடுத்து, இன்று அகர ஒரத்தூரில் நெல் மூட்டைக்கும், இயந்திரத்திற்கும் பூஜை செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

நெல்கள்

மேலும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றிகளை தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக விவசாயிகள் அறுவடை செய்த குறுவை நெல்களை 22 சதவீதம் ஈரப்பதத்துடன் கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share This Article
Leave a review