விவசாயிகள் முதல்வரின் வீடு முன் போராட்டம்., போலியான பத் …

1 Min Read
விவசாயிகள்

தமிழ் விவசாயிகள் சங்கம் காத்திருப்பு போராட்டம்:

- Advertisement -
Ad imageAd image

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் சார்பதிவாளர் அலுவலகத்தில் போலி பத்திர பதிவுகளை கண்டித்தும், சார்பதிவாளரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் நாராயணசாமி தலைமை வகித்தார். மாநில பொருளாளர் சுப்பராஜ், மாவட்ட தலைவர்கள் பாஸ்கரன்,
மதுரை சீனிவாசகன், சமூக ஆர்வலர் சுப்பாராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போலி பத்திரபதிவு:

ராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் சார்பதிவாளர் அலுவலகத்தில் போலியான பத்திரபதிவுகள் அதிக அளவில் நடப்பதால் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். போலி பத்திரபதிவுகள் குறித்து சார்பதிவாளர் செல்லப்பாண்டி மீது புகார் அளித்தால் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.

விவசாயிகள் பாதிப்பு:

போலி பத்திர பதிவுகளை கண்டித்தும், சார்பதிவாளர் செல்லப்பாண்டி மீது வழக்கு பதிவு செய்து அவரை பணி
நீக்கம் செய்ய வலியுறுத்தியும் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதல்வரின் வீடு முன் போராட்டம்:

இதுகுறித்து விவசாயிகள் கூறிய போது, இதுபோன்ற சார்பதிவாளர்களால் விவசாய நிலங்களுக்கு பாதுகாப்பு இல்லை. சார் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக முதல்வரின் வீடு முன் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Share This Article
Leave a review