கழுத்தில் தூக்கு கயிறு நெற்றியில் நாமம் தஞ்சையில் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

1 Min Read
நெற்றியில் நாமம் தஞ்சை விவசாயிகள்

வேளாண் கடன், கல்வி கடனை தள்ளுபடி செய்திட வேண்டும் மேகதாட்டில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கழுத்தில் தூக்கு கயிறுடனும். அதேபோல் தூர்வாரும் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி நாமம் இட்டு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட கூடுதல் ஆட்சியரை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்.

- Advertisement -
Ad imageAd image

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மேட்டூர் அணை ஜூன் 12 திறக்கப்பட உள்ள நிலையில் தூர்வாரும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை எனவும் முறையாக தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் தொடர்ந்து பெய்த கனமழையால் டெல்டா மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளாக சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய மாநில அரசுகள் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் அதேபோல மாணவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கழுத்தில் தூக்கு கயிற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் புதிதாக கர்நாடகாவில் பொறுப்பேற்ற அரசு மேகதாட்டில் அணைக்கட்ட தீவிரமாக முற்படுவதாகவும் அதனை மத்திய மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதேபோல தூர்வாரும் பணிகள் முறையாக மேற்கொள்ளவில்லை பெரிய வாய்க்கால்கள் மட்டுமே தூர்வாரப்படுகிறது கிளை வாய்க்கால்கள் தூர்வாராமல் நாணலுடன் உள்ளது உடனடியாக தூர்வார வேண்டும் என வலியுறுத்தி நெற்றியில் நாமமிட்டு கையில் நாணலுடன் வந்து கூடுதல் ஆட்சியரை முற்றுகையிட்டு கோசமிட்டனர்.

பேட்டி : 1.சுகுமாரன் தமிழக விவசாயிகள் சங்கம் 2.செந்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.

File: 31.05.23 TNJ FARMERS PROTEST

Share This Article
Leave a review