- தஞ்சாவூரில் கடந்த மாதம் கர்நாடக – தமிழக விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ராசி மணலில் அணை கட்டுவதால் தமிழகம் மற்றும் கர்நாடகவிற்கு ஏற்படும் நன்மைகள் மற்றும் மேகதாது பகுதியில் அணை கட்டினால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் 22ஆம் தேதி கர்நாடக மாநிலம் மைசூரில் கர்நாடகா – கேரளா – தமிழ்நாடு – பாண்டிச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் இன்று மைசூருக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக தஞ்சை பெரிய கோவில் அருகே உள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/a-class-12-student-holds-a-world-record-by-lifting-four-wheelers-on-her-fingers/
அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பி.ஆர்.பாண்டியன் மேகதாது பகுதியில் அணை கட்டினால், கர்நாடகத்தை தவிர பிற மாநிலங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதேபோல் ராசி மணல் பகுதியில் அணை கட்டினால் அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்படும் நன்மைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்க உள்ளோம்.
விரைவில் ராசி மணல் பகுதியில் அணை கட்டுவதற்கான முயற்சியை மேற்கொள்வதற்கான நடவடிக்கை அனைத்து விவசாயிகளும் மேற்கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார்.