அரியலூர் மாவட்டத்தில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த காற்றின் காரணமாக மேல வண்ணம் கிராமத்தில் சுமார் 500 வாழை மரங்கள் வேரோடு சாய்தளம். மேலவண்ணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா இவர் தனது வயலில் மூன்றரை ஏக்கர் பரப்பளவில் வாழை மரங்கள் சாகுபடி செய்துள்ளார்.

இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையின் காரணமாக சாகுபடி செய்யப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன. இதன் மதிப்பு ஒன்றரை லட்சம் இருக்கும் எனவும் உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார். இதே போல் மேலவண்ணம் கிராமத்தில் பல்வேறு விவசாயிகள் சாகுபடி செய்திருந்த வாழை மரங்களும் வேரோடு சாயந்தன இதனால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எடுத்துள்ளனர்