கொப்பரை தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய டெல்லியில் விவசாயிகள் போராட்டம்..!

2 Min Read
தென்னிந்திய தென்னை விவசாயிகள் சார்பில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

மத்திய அரசின் நாபெட் (NABARD) நிறுவனம் கொள்முதல் செய்து வைத்துள்ள ஒரு இலட்சம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய்களை பாரத் கோகனட் ஆயில் (Bharath Coconut Oil) என்கிற பெயரில் எண்ணையாக மாற்றி விற்பனை செய்யக்கோரி டெல்லி மாநகர் – ஜந்தர் மந்தரில் நேற்று முதல் தென்னிந்திய தென்னை விவசாயிகள் சார்பில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம். இந்த போராட்டத்தில் விழுப்புரம் மாவட்ட இயற்கை விவசாய சங்கத் தலைவர் நா. சீத்தாராமன் கலந்துக்கொண்டு பேசியதாவது:-

- Advertisement -
Ad imageAd image

மத்திய அரசின் நாபெட் நிறுவனம் கொப்பரை தேங்காய்களை கிலோ ரூ.108.60 க்கு விவசாயிகளிடமிருந்து ஒரு இலட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்து வைத்துள்ளது.நாபெட் நிறுவனம் கொள்முதல் செய்து வைத்துள்ள கொப்பரைகளை வெளிச் சந்தையில் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை மிகத் தீவிரமாக செய்து வருகிறது.இதைப் பயன்படுத்தி தேங்காய் எண்ணெய் வணிகத்தில் ஈடுபட்டுள்ள பெரு நிறுவனங்கள் கூட்டணி அமைத்து கிலோ ரூ. 65 க்கு ஏலம் எடுப்பதற்காக முயற்சித்து வருகிறார்கள்.

தென்னிந்திய தென்னை விவசாயிகள் சார்பில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

மொத்த கொப்பரை தேங்காய் உற்பத்தியில் 10% மட்டுமே மத்திய அரசால் கொள்முதல் செய்யப்படுகிறது, மீதமுள்ள 90% கொப்பரை தேங்காய்கள் வெளிச்சந்தையில்தான் விற்பனையாகிறது.வெளிச்சந்தையில் தற்போது ரூ‌. 85 க்கு விற்பனையாகிக் கொண்டிருக்கும் கொப்பரை தேங்காய் விலை ரூ.60 க்கு குறைவான விலைக்கு சரிந்து விடும், தேங்காய் விலை ரூ.5 ஆக சரிந்து விடும், இதனால் கடுமையான பாதிப்பு தென்னை விவசாயிகளுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தற்போது மத்திய அரசின் நாபெட் நிறுவனம் கொள்முதல் செய்து வைத்துள்ள கோதுமையை பாரத் ஆட்டா என்கிற பெயரில் சப்பாத்தி மாவாக தயாரித்து கிலோ ரூ‌.27 க்கும், பாரத் தால் என்கிற பெயரில் பருப்பு வகைகளை கிலோ ரூ.60 க்கும், பாரத் ஆனியன் என்கிற பெயரில் ரூ. 25 க்கு வெங்காயத்தையும் விற்பனை செய்து வருகிறது.இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் நாபெட் நிறுவனம் தன்னிடம் உள்ள கொப்பரை தேங்காய்களை எண்ணெயாக மாற்றி விற்பனை செய்யாமல், கொப்பரையாக விற்பனை செய்வது தென்னை விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தவுள்ளது.

தென்னிந்திய தென்னை விவசாயிகள் சார்பில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

எனவே மத்திய அரசின் நாபெட் நிறுவனம் கொள்முதல் செய்து வைத்துள்ள ஒரு லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய்களையும், இனி வரும் காலங்களில் கொள்முதல் செய்ய உள்ள கொப்பரை தேங்காய்களையும் பாரத் கோகனட் ஆயில் (Bharath Coconut Oil) என்கிற பெயரில் தேங்காய் எண்ணெயாக மாற்றி, மானிய விலையில் மக்களுக்கு விற்பனை செய்யக்கோரியும்.தென்னை விவசாயிகளுக்கென புதிய திட்டங்கள் அதாவது தென்னை விவசாயிகளுக்கு தேவைக்கேற்ப்ப சோலார் ட்ரையர் சூரிய உலர்த்தி மானிய விளையில் வழங்கிட திட்டம் கொண்டுவரவேண்டும்.

PM Kissan நிதி நமிழ்நாட்டில் ஒரு இலட்சத்திற்கும் மேலான விவசாயிகளுக்கு இன்னும் கிடைக்கவில்லை அதனை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைத்திட உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும்.தேசிய சிறுதானிய ஆண்டாக மத்திய அரசு அறிவிப்பு செய்திருந்தும் அதற்க்கான புதிய திட்டங்கள் ஏதும் அரசு அறிவிக்கவில்லை அதனையும் உடனடியாக சிறுதானிய விவசாயிகளுக்கு பயனுள்ளவகையில் திட்டங்களை அறிவித்திடவேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர் பேசினார்.

Share This Article
Leave a review