டெல்டா மாவட்டத்தின் தலைமடை பகுதியான செங்கிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு கட்டளை மேட்டு கால்வாயில் தண்ணீர் திறக்காத பொதுப்பணித்துறை கண்டித்து கால்வாயில் இறங்கி விவசாயிகள் போராட்டம்.

1 Min Read
  • டெல்டா மாவட்டத்தின் தலைமடை பகுதியான செங்கிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு கட்டளை மேட்டு கால்வாயில் தண்ணீர் திறக்காத பொதுப்பணித்துறை கண்டித்து கால்வாயில் இறங்கி விவசாயிகள் போராட்டம்.

- Advertisement -
Ad imageAd image

டெல்டா மாவட்ட சாகுபடிக்காக மேட்டூர் அணை திறந்து 40 நாட்களுக்கு மேல் ஆன நிலையில் தற்போது வரை தஞ்சை மாவட்டத்தின் தலைமடை பகுதியான கல்லணைக்கு 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செங்கிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இதனை நம்பி இந்த பகுதியில் 15,000 ஏக்கர் விவசாயம் உள்ளது. இந்த பகுதியில் முக்கிய பாசனமாக மாயனூரில் திறக்கப்படும் தண்ணீர் உய்யகொண்டான் கட்டளை கால்வாய் மூலம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு உய்யகொண்டான் கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்காததால் கடந்த ஆண்டு இந்த பகுதியில் சுமார் 15, 000 ஏக்கருக்கு மேல் சாகுபடி பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு தண்ணீர் திறந்து 40 நாட்களுக்கு மேல் ஆகியும் தற்போது வரை ஏரிகளுக்கு தண்ணீர் திறக்காததால் இந்த ஆண்டும் சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்து தமிழக அரசு தண்ணீர் திறக்க உத்தரவிட்டும் இது நாள் வரை இந்த பகுதிக்கு தண்ணீர் வந்து சேராததால் செங்கிப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த ஏரி பாசன விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் தஞ்சை திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள கட்டளை மேட்டு கால்வாயில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதோடு காத்திருக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை அங்கேயே உணவு சமைத்து காத்திருப்பதாகவும் தெரிவித்தார்கள்.

பேட்டி :
1.கண்ணன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

Share This Article
Leave a review