20 கிலோ எடையிலான நிறைவேறாத தனது கோரிக்கை மனுக்களை மாலையாக அணிந்து 9வது ஆண்டாக மனு கொடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருகிறார் விவசாயி ஒருவர்.
பரட்டை தலை. எண்ணெய் வடிந்த முகம், புத்தக மாலை பார்க்க வித்தியாசமாய் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தவரை அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். அவர் அருகில் சென்று விசாரித்த போது, அவர் பெயர் கோவிந்தன் வல்லப்ப பந்து,

விவசாயியான இவர் கும்பகோணம் நாச்சியார்கோவில் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. என்னது புத்தகத்தை மாலையா கழுத்துல போட்டு இருக்கிங்க என விசாரித்த போது. வேதனையுடன் பேச ஆரம்பித்தவர், திருநறையூர் வருவாய் கிராமத்தில் உள்ள 8 குளங்கள் மற்றும் கோவலூர் பஞ்சாயத்து சமத்தனார்குடி குளம் ஆகியவை ஆக்ரமிக்கப்பட்டுள்ளது. குளங்களை தூர்வாரி மக்கள் மற்றும் கால்நடை பயன்பாட்டிற்கு விட வேண்டும் என கோரி கடந்த 9 ஆண்டுகளாக மனு கொடுத்து வந்துள்ளார்.
இவர் மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் அனைத்து மனுக்களையும் மாலையாக அணிந்து வந்ததாக கூறினார். 20 கிலோ எடை இருந்ததால் வெயிட்டாக இருந்ததாக கூறினார்.