திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மான்கானூர் தகடிவட்டம் பகுதியைச்சேர்ந்தவர் சுப்பிரமணி இவர் இந்த பகுதியில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார் விவசாயம் தான் இவருடைய பிரதான தொழில். இவருக்கும் இவருடைய மனைவி ஈஸ்வரி இவர்களுக்கு திருமணமாகி 35 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு.3.மகன்கள் உள்ளனர். திருமணமானதிலிருந்து தன் மனைவி மீது அலாதி பிரியம் வைத்திருப்பவர் சுப்பிரமணி இவர்களுடைய மகன்கள் பெங்களூர் சென்னை என பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த ஆண்டு சுப்பிரமணியின் மனைவி ஈஸ்வரிக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டது பல மருத்துவர்கள் நாடியும் அவருடைய நோயை குணப்படுத்த முடியவில்லை சுப்ரமணியால் இதனால் ஈஸ்வரி இயற்கை மரணம் அடைந்தார்.மனைவி இறந்த துக்கத்தில் வேதனையடைந்த சுப்பிரமணி தன்னோடு வாழ்ந்த மனைவிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தோடு தான் கொஞ்ச காலம் சுற்றித்திரிந்தார். அவருடைய மனைவி ஈஸ்வரியின் நினைவாகவே இருந்து வந்தார். அதன் பின்னர் தான் அவருக்கு சொந்தமான நிலத்தில் 15 சென்ட் இடத்தில் 15 லட்ச ரூபாய் மதிப்பில் 6.அடி உயர ஈஸ்வரியின் திருவுருவ சிலையை நிறுவினார்.
சிலை நிறுவி மட்டும் அல்லாமல் அந்த இடத்தில் கோயில் கட்டி தினமும் வணங்கியும் வருகிறார் சுப்பிரமணி. மனைவியைப் பிரிந்து வாழ முடியாமல் அவர் நினைவுகளோடு தினம் தினமும் ஏங்கித் தவித்த சுப்பிரமணிக்கு இப்போது அவருடைய மனைவி ஈஸ்வரியின் சிலையும் அந்த கோயிலும் தான் பெரிய ஆறுதலாக இருந்து வருகிறது. இந்த காலத்தில் இப்படியும் ஒரு தம்பதியினரா என இதனைக் காண அப்பகுதி மக்கள் வியப்புடன் வந்து செல்கின்றனர்.

கட்டிய மனைவியையும் வயதான காலத்தில் பெற்றோர்களையும் கவனிக்காத பிள்ளைகள் இருக்கும் இந்த காலத்தில் இறந்த மனைவிக்கு சிலை அமைத்து கோயில் கட்டி தினமும் சுப்பிரமணி வணங்கிவருவதை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். வருகின்ற 31ஆம் தேதி ஈஸ்வரிக்கு முதலாம் ஆண்டு நினைவு தினம் வருவதை ஒட்டி அந்த பகுதியில் உள்ள ஏழைப் பெண்கள் 500 பேருக்கு புடவை எடுத்து தர ஏற்பாடு செய்திருக்கிறார் சுப்பிரமணி. அவருடைய இந்த செயல் மனிதநேயத்திற்கும் குடும்ப உறவுக்கு ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக விளங்குகிறது.