காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் அருகே ஆபத்தான வகையில் அதிவேகமாக பொதுமக்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் பைக் ஓட்டி வீலிங் சாகசத்தில் ஈடுபட்டபோது விபத்துக்குள்ளானது தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரம்.
ஏற்கனவே 45 நாட்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றம் காவல் முடிவடைந்து வீடியோ காண்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் வருகிற நவம்பர் 9ம் தேதி வரை மீண்டும் நீதிமன்ற காவலை நீட்டித்து. காஞ்சிபுரம் நடுவர் நீதிமன்ற எண்-1 நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவு. பிரபல யூட்டிபரான TTF வாசன் கடந்த மாதம் செப்டம்பர் 17ம் தேதி காஞ்சிபுரத்திலிருந்து மகாராஷ்டிரா நோக்கி தனது விலை உயர்ந்த அதி நவீன இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக இயக்கி வீலிங் சாகசத்திலும் ஈடுபட்டார்.

இந்த நிலையில் காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் பகுதியில் டிடிஎப் வாசன் தனது இரு சக்கர வாகனத்தில் முன் வீல் தூக்கி வீலிங் செய்ய முற்பட்டபோது அவரது இரு சக்கர வாகனமாமது விபத்துக்குள்ளாகி டிடிஎப் வாசன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இதனையெடுத்து தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், பிறரது உயிருக்கு ஆபத்தை விளைக்கும் வகையில் சாலையில் வாகனத்தை இயக்கியது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் டிடிஎப் வாசன் மீது பாலுச்செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கடந்த மாதம் 19ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் டிடிஎஃப் வாசன் ஜாமீன் மனுவானது இது வரை நான்கு முறை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மூன்று முறை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்து கடந்த 45 நாட்களாக நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நீதிமன்ற காவலானது இன்றுடன் முடிவடைகின்ற நிலையில், இன்று மீண்டும் காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1ல் நீதிபதி இனியா கருணாகரன் முன்னிலையில் டிடிஎப் வாசன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து நான்காவது முறையாக டிடிஎப் வாசனுக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவு பிறப்பித்தார்.வருகிற நவம்பர் மாதம் 9ந் தேதி வரை 11 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.