பிரபல யுடூபர் டி.டி.எப் வாசன் நிபந்தனை ஜாமீன் – சென்னை உயர்நீதிமன்றம்..!

2 Min Read

பிரபல யுடூபர் டிடிஎப் வாசன் நிபந்தனை ஜாமீனுக்கு கையெழுத்து போட 2-ம் நாள் பாலுசெட்டிச்சத்திரம் காவல் நிலையத்தில் ஆஜர். கையெழுத்துப் போட்டு விட்டு வெளியே வந்த வாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டதால் தப்பித்தோம், பிழைத்தோம் என சாலையில் வந்த இருசக்கர வாகன ஓட்டியிடம் லிப்ட் கேட்டு ஏறி சென்றார்.

- Advertisement -
Ad imageAd image

சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு, விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடந்த 17-ம் தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் பைக்கில் அதிவேகமாக சென்றபோது வீலிங் செய்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது வலது கை முறிந்தது. அவரது பைக் பல அடி தூரத்துக்கு பறந்து போய் விழுந்தது.

பாலுசெட்டிச்சத்திரம் காவல் நிலையத்தில் ஆஜர் கையெழுத்து போட போடும் காட்சி

இந்தச் சம்பவத்தை அடுத்து, அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் பாலுசெட்டிசத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.டி.எப்.வாசன், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை தமால் பகுதியில் பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

45 நாள் சிறை வாசத்திற்கு பிறகு ஜாமினில் வெளியே வந்த டிடிஎப் வாசன் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி மூன்று வார காலத்திற்கு நாள்தோறும் பாலுசெட்டிச்சத்திரம் காவல் நிலையத்தில் கையெழுத்து போட நேற்று முதல் நாள் ஆஜராகி கையெழுத்திட்டு சென்றார். இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி டி.டி.எஃப் வாசல் இன்று இரண்டாம் நாள் பாலுசெட்டிச்சத்திரம் காவல் நிலையத்திற்கு காரில் வந்து இறங்கி நேரில் ஆஜராகி 10.30 மணி அளவில் கையெழுத்து போட்டு விட்டு சென்றார்.

பிரபல யுடூபர் டி.டி.எப் வாசன்

கையெழுத்து போட்டு விட்டு வெளியே வந்த டி.டி.எஃப் வாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க முற்பட்ட போது தப்பித்தோம், பிழைத்தோம் என சாலையில் வந்த இருசக்கர வாகன ஓட்டியிடம் விட்டு கேட்டு ஏறிக்கொண்டு வேகமாக சென்று விட்டார்.

Share This Article
1 Review