பிரபல ரவுடிகள் என்கவுண்டர் போலீசார் நடவடிக்கை.

2 Min Read
சுட்டுக்கொல்லப்பட்ட ர்வுடிகள்

தமிழக காவல் துறை ரவுடிகளை கட்டுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.அந்த வகையில் நேற்று பிரபல ர்வுடி ஒருவரை செங்கல்பட்டு மாமண்டூர் அருகே கைது செய்தது.அவர் தப்பி ஓட முயற்சிக்க அவரை சுட்டு பிடித்தனர்.அதே போன்று இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு பிரபல ரவுடிகளை போலீசார் தேடுதல் வேட்டையின் போது சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image
கொல்லப்பட்ட இடம்

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த காந்தி நகரை சேர்ந்தவர் பிரபல ரவுடியும் கூலிப்படை தலைவருமான முத்து சரவணன் வயது 35. இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அண்மையில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் என்பவரை ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கிலும் முத்து சரவணன் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு வந்தார்.

முத்து சரவணன்

டெல்லியில் கைது

இந்நிலையில் தனிப்படை போலீசாரால் பல நாட்கள் தேடி வந்த நிலையில் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்ட முத்து சரவணன் மற்றும் அவரது கூட்டாளி, சண்டே சதீஷ் ஆகிய இருவரையும் சென்னை அழைத்து வந்து சோழவரம் அருகே பூதூரில் வைத்து விசாரணை நடத்தினர் இருவரும் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை இருவரும் தப்பிக்கும் எண்ணத்தோடு இருந்து வந்துள்ளனர்.இந்திலையில் ரவுடிகள் இருவரும் காவல்துறையினரை தாக்கி விட்டு தப்ப முயன்றுள்ளனர். காவல் துறையினர் எவ்வளவோ தடுத்தும் இருவரும் தாக்கிவிட்டு தப்பிக்கும் நிலைபாட்டிலே இருந்துள்ளனர்.

சண்டே சதீஷ்

என்கவுண்டர்

இதனை அடுத்து முத்து சரவணன் சண்டே சதீஷ் இருவரையும் காவல்துறையினர் வேறு வழியில்லாமல் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர்.உயிரிழந்த பின்னர் அவர்களின் உடல்களை ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமணைக்கு கொண்டுவந்தனர்.தற்போது இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.ரவுடிகளின் தாக்குதலில் காயமடைந்த போலீசார் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களை ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கே நேரில் சென்று நலம் விசாரித்தார்.ரவுடிகள் இருவர் என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் சோழவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரவுடிகளிடம் இருந்து பொது மக்களை காக்கும் பணி காவலர்களுக்கு விடப்பட்ட சவால்களாகவே இருந்து வரும் சூழலில் இது போன்ற சம்பவங்களும் நிகழ்ந்து தான் வருகிறது.தொடர்ந்து ரவுடிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Share This Article
Leave a review