தமிழகத்தைச் சார்ந்த போலிச் சாமியார் தெலுங்கானாவில் கைது.

2 Min Read
போலிச் சாமியார் சந்தோஷ்

பேச முடியாதவர்களே பேச வைப்பதாகவும், நடக்க முடியாதவர்களை நடக்க வைப்பதாகவும் 5 சனிக்கிழமைகளில் தன்னை தரிசனம் செய்தால் முழு ஆரோக்கியம் கிடைக்கும். நானே மகாவிஷ்ணு  என கூறி ஏமாற்றிய போலிச் சாமியாரை கைது செய்த போலீசார்.

- Advertisement -
Ad imageAd image

தெலுங்கானாவில் மக்களின் குறைகளை போக்க தமிழகத்தில் இருந்து வந்ததாக போலிச் சாமியார் பிரச்சாரம்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த சந்தோஷ்குமாருக்கு இரண்டு மனைவிகளும், ஒரு மகனும் உள்ளனர். சந்தோஷ் ஒரு ஆண்டுகளுக்கு முன்பு தெலங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் சுகுரு கிராமத்தில் உள்ள ஒரு கோயிலில்  அர்ச்சகராக பணியில் சேர்ந்தார். சந்தோஷ் தன்னை மகா விஷ்ணுவாகவும், தனது மனைவிகளை ஸ்ரீதேவி, பூதேவி என கூறி கொண்டு மக்களை காக்க மனித உருவில் வந்த கடவும் என தன்னை சந்திக்க வருபவர்களிடம் கூறி வந்துள்ளார்.

மேலும் நிஜ பாம்பு தனது படுக்கையாக இருக்க வேண்டும். தற்காலிகமாக  ஐந்து தலைகள் கொண்ட பாம்பு போன்று கட்டில் அமைத்து அதில் படுத்து கொண்டு தனது  இரண்டு மனைவிகள் கால் அழுத்தி விடுவது போன்றும், திருப்பதி ஏழுமலையான் போன்று வேடம் அணிந்து போட்டோக்களை எடுத்து சுற்று வட்டாரத்தில் நான் கடவுள் என  பிரச்சாரம் செய்து வந்துள்ளார்.

போலிச் சாமியார் சந்தோஷ்

அவ்வாது பாலமூறு மாவட்டம் கெட்டிதொட்டி மண்டலம் உமித்யாலா கிராமத்தின் தலைவர் சத்தியநாராயணனிடம் ஸ்ரீ ரங்கம் ரங்கநாத சுவாமி தனது உடலுக்குள் இருப்பதாகவும், நோயால் அவதியுறும் மக்களின் பிரச்சனைகள்  தீர்க்க தனக்கு சிறிது இடம் ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார். இதனையடுத்து சத்யநாராயணாவும் கிராம மக்களிடம் தெரிவித்து விவசாய நிலத்திற்கு மத்தியில் உள்ள வீட்டை வழங்கினர்.

அங்கு அமர்ந்து பக்தர்களை தரிசிக்க ஏற்பாடு செய்து கொண்டார். திருப்பதியில் உள்ள ஏழுமலையானுக்கு அலங்கரிக்கப்படும் மலர் மாலைகள்     விரைவில் என்னை அலங்கரிக்க வரும் என பக்தர்களிடம் கூறி வந்தார்.

உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருடன் தரிசித்தால், அனைத்து நோய்களும் விலகி, பூரண ஆரோக்கியத்துடன் வாழ்வர் என பக்தர்களுக்கு தெரிவித்தார். இதனை அறிந்த சுற்றுவட்டார மக்கள் சுவாமியை நேரில் சந்தித்து தங்களது குறைகளை தெரிவித்தனர்.

கடந்த மூன்று நாட்களாக பல்வேறு நோய்கள் மற்றும் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை சந்தோஷ் சுவாமி தீர்த்து வைப்பதாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.  

சுவாமிஜியின் மகிமையால் தான் பலர் பேசவும், நடக்க முடியாதவர்கள் நடக்கவும் முடிந்தது என்ற பிரச்சாரம் சுற்றுவட்டார கிராமங்களுக்கு பரவியது.  இதனால் சந்தோஷ் சுவாமியை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்றனர்.

பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதனை அறிந்த கொடிதொட்டி போலீசார் சந்தோஷைஅங்கிருந்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் பல்வேறு நிபந்தனைகளுடன் விடுவித்தனர்.

Share This Article
Leave a review