கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.

1 Min Read
சென்னை உயர்நீதிமன்றம்
  • கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்க்ப்பட்ட விவகாரத்தில் தனியார் பள்ளியின் முதல்வர், தாளாளருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

- Advertisement -
Ad imageAd image

சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளி சிவராமன் கைது செய்யப்பட்டார். மேலும், முகாம் நடந்த தனியார் பள்ளியின் முதல்வர்,தாளாளர் மற்றும் ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டனர்.

ஜாமீன் கோரிய இவர்களின் மனுவை கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் ஜாமீன்கோரி பள்ளி நிர்வாகத்தினர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில், இந்த சம்பவத்திற்கும் தங்களுக்கும், எந்த தொடர்பும் இல்லை என்றும் சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே தங்களுக்கு எதிராக வழக்க பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி பி.தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது . மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், முக்கிய குற்றவாளியான சிவராமனுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் தொடர்பு இருப்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து , வழக்கு விசாரணை அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Share This Article
Leave a review