திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் வெடி குடோனில் ரூ 8 இலட்சம் மதிப்பிலான வெடிப்பொருட்கள் எரிந்து நாசம். அப்பகுதி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. போலிசார் விசாரணை.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதியில் பல ஆண்டுகாலமாக வீடு தோறும் வசித்து வருகின்றனர்.அப்போது குடிசை தொழிலாக பட்டாசு வெடி பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமீபகாலமாக வலங்கைமான் பகுதியில் பட்டாசு வெடி மருந்து தயாரித்தலில் சிவகாசிக்கு நிகராக பேசப்படுகிறது.

இத்தகைய சூழலில் வலங்கைமான் பகுதியில் பட்டாசு வெடி மருந்து தயாரிப்பது என்பது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணாக குடியிருப்பு பகுதிகளிலேயே பட்டாசு வெடிப்பொருட்கள் தயாரிக்கப்படுவது, சம்மந்தமாக வலங்கைமான் பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தமிழக முதல்வர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் புகார் மனு அளித்தனர்.
பின்னர் இந்த நிலையில் அளவுக்கு அதிகமாக விற்பனையில் ஈடுபட்ட கடைகளில் 40 இலட்சம் மதிப்பிலான வெடிபொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் . இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழ்நிலையில் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் வகையில் வலங்கைமான் பகுதியில் 12 வெடி உற்பத்தி கடைகள் மற்றும் 48 விற்பனை கடைகள் உள்ளது.

இந்நிலையில் வலங்கைமான் பகுதி குடவாசல் சாலையில் கீழத்தெரு பகுதியில் துரை மகன் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான வெடி மருந்து கடைக்கு பின்புறம் பட்டாசுகள் விற்பனைக்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் ரூ 8 லட்சம் மதிப்பிலான வெடிகள் மருந்துகள் திடீரென தீப்பிடித்து எறிந்தது.
வலங்கைமான் மற்றும் குடவாசல் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். வெடி மருந்து இருப்பு வைக்கப்பட்ட இடத்தில் தீ விபத்து ஏற்பட்ட அப்பகுதியில் மிகுந்த பெரும் பதட்டம் நிலவுகிறது .இதுபோன்று வலங்கைமான் பகுதியில் பல இடங்களில் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

பல இடங்களில் வெடி மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.