அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் உயர்த்தப்படாது – அமைச்சர் பொன்முடி..!

2 Min Read

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவி பேராசிரியர்கள் உயர்கல்வித்துறை பரிந்துரையின் படி, தகுதி நீக்கம் செய்துள்ளதாகவும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டுக்கான தேர்வு கட்டணம் உயர்த்தப்படாது என்று அமைச்சர் பொன்முடி நேற்று தெரிவித்தார். விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி செய்தியாளரிடம் கூறியதாவது; அண்ணாமலை பல்கலைக்கழகம் தனியார் பல்கலைக்கழகமாக இருக்கிற போது உதவி பேராசிரியர் பணியிடத்துக்கான தகுதிகளை அவர்களை நிர்ணயித்து அனுப்பி இருக்கிறார்கள். கல்வித்தகுதி குறைவாக இருந்தவர்கள் கூட அப்போது தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

- Advertisement -
Ad imageAd image

தற்போது இந்த பல்கலைக்கழகத்தில் 56 உதவி பேராசிரியர்கள் உரிய கல்வித் தகுதி இல்லாததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை வரவேற்கக் கூடியது. அந்த பல்கலைக்கழகம் 2011 ஆம் ஆண்டு ஏற்கனவே தனியார் நிர்வாகத்தின் கீழ் இயங்கிய காலகட்டத்தில் யு.ஜி.சி விதிகளை மீறி ஏராளமான பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களை நியமித்தது. இக்கட்டான சூழ்நிலையில் அரசு நிர்வாகம் அந்த பல்கலைக்கழகத்தை ஏற்று கடினமான சூழ்நிலையிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இந்த நிலையில் யு.ஜி.சி விதிகள் படி நெட், பிஹெச்டி, எம்பில் போன்றவற்றை முடிக்காதவர்கள் உதவி பேராசிரியர்களாகவும் பணியில் தொடர்ந்து இருந்தவர்களை விதிகள் படி நீக்குவதற்கு துணைவேந்தரும் பல்கலைக்கழக சிண்டிகேட் ஆய்வு கூட்டம் நடத்தி முடிவெடுத்தது.

அமைச்சர் பொன்முடி

அதற்கு உயர் கல்வித்துறையும் பரிந்துரை செய்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது அவர்கள் 56 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு யாரும் பொறுப்பல்ல. குறிப்பாக இதில் 52 பேர் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் பாடப்பிரிவு உதவி பேராசிரியர்கள், இரண்டு பேர் ப்ரோக்ராம் கோரஸ் எடுத்தவர்கள், ஒருவர் எக்கனாமிக்ஸ், மற்றொருவர் அக்ரிகல்ச்சர் பாடப்பிரிவு எடுத்தவர் உயர்கல்வித்துறை விதிகள் படி அவர்கள் தகுதி இல்லாதவர் என்பதால் அவர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் அவர்கள் தகுதியுள்ள பணிக்கு விண்ணப்பித்தால் சில சலுகைகள் அளிக்கப்பட்டு, அதற்குரிய இடங்களில் நியமிப்பது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கும்.

அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் இந்த ஆண்டு உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பாடப்பிரிவுக்கு ரூபாய்150 லிருந்து கட்டணம் ரூபாய் 225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பொதுவாகவே அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தேர்வு கட்டணத்தை ஒரே சீராக இருக்க வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் குறைவாக உள்ள பல்கலைக்கழக தேர்வு கட்டணத்தை உயர்த்துவதற்கு அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இருந்த போதிலும் இந்த ஆண்டு செமஸ்டர் தேர்வு கட்டணம் உயர்த்தியதை நிறுத்தி வைக்கப்படுகிறது. ஒரே மாதிரியான தேர்வு கட்டணம் குறித்து ஆலோசனை நடத்தி அடுத்த ஆண்டு முதல் அதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அமைச்சர் பொன்முடி

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தவறான வினாத்தால் தொடர்பான புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். கேள்வித்தாள் தயாரித்த குழுவினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது புகழேந்தி எம்.எல்.ஏ மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Share This Article
Leave a review