தமிழகத்தில் அதிமுக பிஜேபி கூட்டணி முறிவு ஏற்பட்டது.இது அரசியலில் ஒரு பெரும் திருப்பு முனையாக அதிமுகவிற்க்கு அமைந்தது.எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலை மையமாக வைத்து அதிமுக செயல்பட துவங்கி உள்ளது.இந்த நிலையில் அதிமுகவிற்கு திமுக தான் நேரடி எதிரி என அதிமுக கூறி வரும் நிலையில்,தொடர்ந்து அதிமுக பல பொதுக்கூட்டங்களில் திமுகவையும் அதன் தலைவர்களையும் இழிவாக பேசி வருவதாக திமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுகவின் முக்கிய புள்ளியாக கருதப்படும், எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் நெருக்கமானவருமான முன்னாள் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும்,அதிமுக கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளருமான குமரகுரு கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற அதிமுகவின் பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதின் விளைவாக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மேடையில் பேசும் போது கவனமுடன் பேச வேண்டும் அன்று பேசும் போது அதிமுக மாவட்ட செயலாளர் முதல்வரையும் அமைச்சரையும் அவதூறாக பேசியுள்ளார்.அப்படி பேசிய அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு இதே போன்று ஒரு பொதுக்கூட்ட மேடை அமைத்து அந்த பொதுக்கூட்டத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்து இருந்தது.

அதன் அடிப்படையில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த மாதம் 17ஆம் தேதி அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்கும் வகையில் கள்ளக்குறிச்சியில் மீண்டும் பொதுக்கூட்டம் நடத்தி தான் பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பதற்காக கள்ளக்குறிச்சியி மீண்டும் அதிமுக சார்பில் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது,அந்த கூட்டத்தில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளருமான குமரகுரு பேசினார்.அப்போது தான் பேசியதற்க்கு குமரகுரு மன்னிப்பு கேட்டார்.
அவதூறாகவும்,தரக்குறைவாகவும் பேசுகிறவர்களுக்கு இது போன்ற தண்டனை புதிதாக இருந்தாலும் கூட பொதுமக்களிடையே இந்த தண்டனை ஒரு வரவேற்பு பெற்று இருக்கிறது அரசியல் நாகரிகம் கருதி இனி அரசியல்வாதிகள் பேச வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணமாக அமைந்துள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.தனி மனித தாக்குதல் என்பது அரசியலில் இருக்க கூடாது.அரசியல் என்பது மக்களுக்கு சேவையாற்றுகிற ஒரு பணி அதை தான் அரசியல்வாதிகள் செய்ய வேண்டும் இதை தான் இந்த உத்தரவு சொல்கிறது.