2021 சட்டப்பேரவை தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா எம்.எல்.ஏ-வாகத் தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஜனவரி 4ம் தேதி திருமகன் ஈவேரா உடல்நலக் குறைவால் காலமானார். அவரின் மறைவையொட்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் யாரை நிறுத்துவது என குழப்பத்தில் இருந்தது காரணம் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் அவர் சட்டமன்றத்திற்கு போட்டியிடமாட்டார் அதனால் திமுகவே நேரடியாக கல்த்தில் இறங்க முடிவுசெய்தது அப்படியானால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சீட் குறந்துவிடும் எனவே காங்கிரஸ் கட்சி இளங்கோவனையே களமிறக்க திட்டமிட்டது.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். இந்த நிலையில், டெல்லியில் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களிடம் வாழ்த்து பெறுவதற்காக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் டெல்லி சென்றார்.

டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். உடனடியாக அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தார்.
அங்கு கொரோனா தொற்று மற்றும் இதயநோய்க்கு 15 நாட்களுக்கு மேலாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சமீபத்தில் குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி பெற்ற நிலையில் இன்று சட்டமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். அவருக்கு காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
34 ஆண்டுகளுக்குப் பிறகு எம்.எல்.ஏ-வாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வருகை தந்துள்ளார்.சட்டமன்றத்திற்க்கு இளங்கோவன்.