தி.மு.க இல்லை என்றால் கார்த்திக் சிதம்பரத்திற்கு டெபாசிட் இல்லை: இ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஓபன் டாக்
சிவகங்கை தொகுதியில் கார்த்திக் சிதம்பரம் வெற்றி பெற தி.மு.க தான் உழைத்தது என்று, இ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.சமீபத்தில் முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கார்த்திக் சிதம்பரம், தி.மு.க இல்லை என்றால் டெபாசிட் கூட வாங்கியிருக்க மாட்டார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இளங்கோவன் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் செல்வபெருந்தகை பேச்சு அல்லது கார்த்திக் சிதம்பரம் பேச்சு கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு பதில் அளித்த இ.வி.கே.எஸ் இளங்கோவன், கண்டிப்பாக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக கார்த்திக் சிதம்பரத்திற்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன்.நாடாளுமன்ற தேர்தலுக்கு முன், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள், பலரும் டெல்லி சென்று, கார்த்திக் சிதம்பரத்திற்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க கூடாது என்று கூறியிருந்தனர். ஆனால் பல எதிர்ப்புகளுக்கு இடையில் தான் அவருக்கு சீட் கொடுக்கப்பட்டது. இந்த தொகுதியில் அவருக்காக திமுக தான் முழுக்க முழுக்க வேலை செய்தது. காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் வட்ட தலைவர்கள் வேலை செய்யவில்லை.

குறிப்பாக சிவகங்ககை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் கார்த்திக் சிதம்பரத்திற்கு ஓட்டு போட்டார்களா என்பது கூட தெரியவில்லை. திமுக வேலை செய்யவில்லை என்றால் கார்த்திக் சிதம்பரம் டெபாசிட் கூட வாங்கியிருக்க மாட்டார். திமுக பெருந்தன்மையுடன் நடந்துகொள்கிறது. ஆனால் கார்த்திக் சிதம்பரம் சுயநலமாக செயல்படுகிறார் என்று இ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.இளங்கோவனின் இந்த பேச்சு இப்போது காங்கிரஸ் கட்சியில் இப்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.காங்கிரஸ் கட்சி எப்போதும் இது போன்ற சர்ச்சை பேச்சுக்களுக்கு பெயர் போனது தான் ஆனால் இப்போது கொஞ்சம் சூடு பிடித்துள்ளது. இ.வி.கே.எஸ்.இளங்கோவன் இந்த பேச்சுக்கு கார்த்திக் சிதம்பரத்திடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.அப்படி வரும் பட்சத்தில் இந்த பேச்சு விவாதப்பொருளாகும்.