கடவுள் முருகர் குறித்து அமைச்சர் பன்னீர் செல்வம் அவமதிக்கும் வகையில் பேசியது கண்டிக்கத்தக்கது – பாஜக

1 Min Read
அமைச்சர் எம் ஆர் கே எம் ஆர் கே

கடவுள் முருகர் குறித்து அமைச்சர் பன்னீர் செல்வம் அவமதிக்கும் வகையில் பேசியது கண்டிக்கத்தக்கது என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில்,””கடவுள் முருகர் குறித்து அமைச்சர் பன்னீர் செல்வம் அவமதிக்கும் வகையில் பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. முருகன் இரண்டா அ‌ல்லது மூன்றா? ஆமாம் சாமி… இரண்டு திருமணம் தான். அந்த காலத்திலேயே ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் தினை மாவு சாப்பிட்டார் ” என்று கூறி விட்டு “ஏதோ சாதாரணமாக கிண்டலாக, ஜோவியலாக பேசுகிறேன்” எ‌ன்று‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

நாராயணன் திருப்பதி

உவமான, உவமேயங்களுக்கு  ஆன்மீக எதிர்ப்பாளர்கள் ஏன் கடவுள்களை குறிப்பிட வேண்டும்? ஏன் க‌ட‌ந்த காலத்தை குறிப்பிட வேண்டும்? நிகழ் காலத்தில் இல்லாத சான்றுகளா? திராவிட மாடலில் இல்லாத ஒப்பீடுகளா?

சாதாரணமாக, கிண்டலாக, ஜோவியலாக உங்கள் தலைவர் கருணாநிதி அவர்களையே குறிப்பிட்டிருந்தால் அனைவருக்கும் எளிதாக புரிந்திருக்குமே? தினை மாவை எங்கே வாங்கினார் என்பதையும் சேர்த்து சொல்லுங்களேன்!” எனக் கூறியுள்ளார்.

Share This Article
Leave a review