- சாலியமங்கலம் அருகே கால்களின் உறுதிகளை இழந்தாலும், வருமானத்திற்க்காக மனதளவில் உறுதியுடன், சரக்கு ஆட்டோ வாகனம் ஓட்டி வரும் மாற்றுத்திறனாளி பட்டதாரி வாலிபர்..
மாற்றுத்திறனாளி பட்டதாரிகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா சாலியமங்கலம், பச்சைக்கோட்டை நடுத்தெரு பகுதியில் வசிப்பவர் அருண்குமார் (43). மாற்றுத்திறனாளியான இவர் தனது தாயார் கலைமணியுடன் வசித்து வருகிறார். பூண்டியில் அமைந்துள்ள கல்லூரியில் எம்.காம்.பட்டப்படிப்பை முடித்துள்ள அருண்குமார், டிஎன்பிசி, இபி, வீஏஓ உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பலமுறை தேர்வுகளை எழுதி உள்ளார்.
அதில் தேர்ச்சி பெறாத நிலையில் வருமானத்திற்காக சரக்கு ஆட்டோ வாகனம் ஒன்றை வாங்கி, அதில் கிடைக்கக்கூடிய சொற்ப பணங்களை வைத்துக்கொண்டு, தன் தாயாருடன் வசித்து வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் அம்மாபேட்டை ஒன்றிய அமைப்பாளராக இருக்கும் பட்டதாரியான இவர். எம்.காம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசு சார்ந்த துறைகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திடம் முயற்சி செய்தும், இதுவரை எந்தவித பயனும் இல்லை என வேதனையுடன் தெரிவிப்பதுடன், சொற்ப வருமானமாக இருந்தாலும், பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள், வேலையில்லாமல் இருக்கும் சூழ்நிலையில், மன உறுதிகளை இழந்து விடாமல் வருமானத்திற்காக ஏதாவது ஒரு பணிகளை செய்து வர வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கால்களின் உறுதிகளை இழந்தாலும், மனதளவில் உறுதியுடன் சரக்கு ஆட்டோ வாகனம் ஓட்டி வரும் மாற்றுத்திறனாளி அருண்குமார். தமிழக அரசும், தமிழக முதல்வரும் எங்களைப் போன்று தமிழகத்தில் வசிக்கும், மாற்றுத்திறனாளி பட்டதாரிகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் முன்வர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.