இன்று ஈஸ்டர் பண்டிகை , தலைவர்கள் வாழ்த்து

2 Min Read
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்

கிறிஸ்தவர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

- Advertisement -
Ad imageAd image

மரணத்திலிருந்து இயேசு கிறிஸ்து விடுதலை பெற்று உயிர்த்தெழுந்த நிகழ்வை கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற கிறிஸ்தவச் சபைகளிலும் பாஸ்கா திருவிழிப்பு என்ற பெயரில் நினைவு கூறும் ஒரு நிகழ்வாக இது அமைந்துள்ளது.

ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய நாளான சனிக்கிழமை மாலை அல்லது இரவில் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. கல்வாரி மலையில் சொல்ல முடியாத அளவு துயரத்தில் முள் கிரீடம் சூட்டப்பட்டு சித்திரவதைக்குள்ளான போதும் தனக்கு தண்டனை அளித்தவர்களை மன்னிக்க வேண்டி இறைவனிடம் மன்றாடினார்.

“இறைவா இவர்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள் இவர்களை மன்னியும்” என வேண்டிக் கொண்டார். இந்த இறை குணம் மனிதனுக்கும் வர வேண்டும் என்பது அவரின் எண்ணம். ஆனால் எந்த குற்றமும் செய்யாத நிலையிலும் இயேசு பிரானை சிலுவையில் அறைந்தனர். சிலுவையில் அறையப்பட்டு மரணமடைந்த ஏசுபிரான் அன்றிலிருந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். அந்நாள் ஈஸ்டர் தினமாக கொண்டாடப்படுகிறது.

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் , இதில் அதிமுக ஓ பண்ணீர்செல்வம் அவர்கள் ‘தேவ குமாரனாம் இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் திருநாளாகக் கொண்டாடி மகிழும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த #Easter திருநாள் நல்வாழ்த்துகள்!’ என்று தெரிவித்துள்ளார் .

தேவ குமாரனாம் இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் திருநாளாகக் கொண்டாடி மகிழும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த #Easter திருநாள் நல்வாழ்த்துகள்! pic.twitter.com/iz4FN4ZscA— O Panneerselvam (@OfficeOfOPS) April 8, 2023

இதேபோல் , காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கேஎஸ் அழகிரி , பாமக கட்சி நிறுவுனர் ராமதாஸ் , விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் ஈஸ்டர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் .

Share This Article
Leave a review