தீபாவளி போனஸாக 15 பேருக்கு புதிய புல்லட் பைக் வழங்கிய எஸ்டேட் உரிமையாளர்..!

2 Min Read
15 பேருக்கு புதிய புல்லட் பைக் வழங்கிய எஸ்டேட் உரிமையாளர்

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே தீபாவளி போனஸாக 15 பேருக்கு புதிய புல்லட் பைக் வழங்கிய எஸ்டேட் உரிமையாளர். மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் தொழிலாளர்கள்.

- Advertisement -
Ad imageAd image

தீபாவளிக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் நிறுவனங்கள் பல ஊழியர்களுக்கு போனஸ் வழங்கும் பணியையும் துவங்கியுள்ளன. ஆண்டுதோறும் தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊக்கத் தொகை,இனிப்பு, கார வகைகளுடன் பட்டாசு மற்றும் புதிய ஆடைகளை பல நிறுவனங்கள் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி பகுதியில் உள்ள சிவகாமி தேயிலை தோட்ட முதலாளி, தனது ஊழியர்களுக்கு Royal Enfield பைக்கை தீபாவளி போனஸ் பரிசாக கொடுத்து தொழியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். யார் அந்த முதலாளி?

முதலாளி, தனது ஊழியர்களுக்கு Royal Enfield பைக்கை தீபாவளி போனஸ் பரிசாக கொடுத்து தொழியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள சிவகாமி எஸ்டேட்டின் உரிமையாளர் சிவகுமார். திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபரான இவர், கோத்தகிரி பகுதிகளில் கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறி மற்றும் கொய்மலர் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகிறார். தனது நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு , ஒவ்வொரு ஆண்டும் அவர்களுக்கு ஏற்றவாறு டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ், உள்ளிட்டவற்றை வழங்கி வந்துள்ளார்.

இந்த வருட தீபாவளிக்கு, போனஸாக தனது எஸ்டேட்டில் பணிபுரியும் 15 ஊழியர்களுக்கும் ஆளுக்கு ஒரு ராயல் என்ஃபீல்டு புல்லட் என 15 ராயல் என்ஃபீல்டு புல்லட் வழங்கி அசத்தியிருக்கிறார். இதில் டிரைவர் முதற்கொண்டு மேனேஜர் வரை அடக்கம். ஊழியர்களிடையே புல்லட் சாவியை வழங்கி ஊழியர்களிடம் சிவக்குமார் பேசும் போது “பணி முக்கியம் அதைவிட குடும்பம் மிக மிக முக்கியம்” குடும்பத்திற்கான நேரத்தை ஒதுக்குங்கள் என அன்போடு பேசி, உங்களுக்கு நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினார்.

முதலாளி ஊழியர்களுடன் ராயல் என்ஃபீல்டு பைக்கில் தானும் ஜாலி ரைட் சென்றார்.

ஊழியர்களுடன் ராயல் என்ஃபீல்டு பைக்கில் தானும் ஜாலி ரைட் சென்றார். மகிழ்வித்து மகிழ் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் சிவக்குமார், நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில் வர்ணம் பூசுதல்,முதல் மாணவர்கள், பொதுமக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து தனது சொந்த செலவில் சேவையாற்றி வருகிறார். இதற்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெறிவித்தனர். தான் உயர பாடுபட்ட மக்களுக்கு திரும்பிச்செய்வது மனநிறைவாக இருப்பதாக தெரிவித்தார்.

Share This Article
Leave a review