ஈரோடு மாவட்டம், அடுத்த புளியம்பட்டி பகுதியை சேர்ந்த துர்கா (26) என்பவர் 2-வது பிரசவத்திற்காக புளியம்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை அன்று அனுமதிக்கப்பட்டார். மேலும் அன்று இரவு துர்காவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.

ஏற்கனவே துர்காவிற்கு ஐந்து வயதில் குழந்தை உள்ள நிலையில் துர்காவிற்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய துர்காவின் கணவர் பன்னீர்செல்வம் மருத்துவரை அணுகி உள்ளார்.

Erode – அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட இளம் பெண் உயிரிழப்பு

அதனை தொடர்ந்து துர்காவிற்கு ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்த போது அதிக ரத்த போக்கு ஏற்பட்டதால் உடனடியாக மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட இளம் பெண் உயிரிழப்பு

அப்போது மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென்று நேற்று காலை துர்கா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். துர்காவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து உறவினர் கூறுகையில்:-

உறவினர்கள்

ஈரோடு மாவட்டம், அடுத்த புளியம்பட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் துர்காவிற்கு எந்த விதமான பரிசோதனை செய்யாமல் குடும்ப கட்டுப்பாடு செய்ததாகவும், துர்காவின் இரத்தின் அளவு குறைவாக இருப்பதாக மருத்துவர் கூறி இந்த நிலையில், துர்காவிற்கு குடும்ப கட்டுப்பாடு செய்ததால் அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டது.

குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட இளம் பெண்

மேலும் இது குறித்து மருத்துவர்கள் மட்டும் செவிலியர்களிடம் கேட்ட போது எந்த விதமான பதிலளிக்கவில்லை என உறவினர் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இது குறித்து புளியம்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்யாமல் காலம் தாமதம் செய்து வந்தனர்.

புளியம்பட்டி காவல் துறையினர்

இதனால் இறந்து 2 நாட்கள் ஆகியும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளாமல் துர்காவின் உடல் பிணவறையில் இருப்பதாக உறவினர் கூறுகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here