- தொல்லியல் முக்கியவம் வாய்ந்த ஈரோடு சடையப்பசாமி கோவிலின் .மூலஸ்தானத்தை மறுசீரமைப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்த வழக்கு .
- ஆலயம் காப்போம் என்ற அமைப்பு தாக்கல் செய்த வழக்கில் 2 வாரத்தில் இந்து சமய அறநிலைய துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு .
- கோவில் சீரமைப்பு என்ற பெயரில் 200 ஆண்டுகள் பழமையான கோவிலின் மூலஸ்தானத்தில் உள்ள சிலையை அகற்ற கூடாது, மூலஸ்தானத்தை சீரமைக்க கூடாது -ஆலயம் காப்போம் அமைப்பு .
200 ஆண்டுகள் பழமையான ஈரோடு சடையப்ப சாமி கோவிலின் மூலஸ்தானத்தை மறுசீரமைப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் இந்து அறநிலைய துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் தண்ணீர் அருந்த சென்ற மாடு காட்டுப்பகுதியில் தன்னுடைய பாலை சிந்தியது. அந்த இடத்தில் சுயம்புவாக சடையப்ப சாமி இருப்பதை அறிந்து அங்கு 1828 ம் ஆண்டு கருப்பண்ணன் என்பவர் சடையப்ப சாமிக்கு, கோவில் கட்டினார்.இந்த கோவிலின் நிலங்கள் ஆக்கிரமிப்பு, வனப்பகுதிகள் அழிப்பு என பல்வேறு பிரச்சனைகளால் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த சடையப்ப சாமி கோவில் சேதமடைந்துள்ளன.
இந்து சமய அறநிலைய துறை, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ள மாநில அளவிலான நிபுணத்துவ குழுவிற்கு , கடந்த 2019 ம் ஆண்டு அனுமதி வழங்கியது.
இதையடுத்து மரங்கள் வெட்டப்பட்டு, சடைப்ப சாமி கோவிலின் இருந்த மிகவும் பழமையான முனி மற்றும் குதிரை சிலைகள் அகற்றப்பட்டு புதிய சிலைகள் நிறுவப்பட்டன.
இந்நிலையில் கோவில் மறுசீரமைப்பு என்ற பெயரில் மூலஸ்தானத்தில் உள்ள சடையப்ப சாமியின் சிலையை அகற்றி புதிய சிலையை வைக்கவோ, மூலஸ்தான சுவரை மறு சீரமைப்பு செய்ய கூடாது என இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிடக் கோரி ஆலயம் காப்போம் என்ற அமைப்பின் தலைவர் பி.ஆர் ரமணன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/aiadmk-party-will-disappear-after-2026-elections-says-ammk-leader-ttv-dhinakaran-at-thanjavur/
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பாஸ்கர் ஆஜராகி, சடையப்ப சாமி கோவிலின் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் என்பதால் அதை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார். இதை பதிவு செய்த