பதவி விலக வேண்டுமானால் கும்பகோணம் ,கொடநாடு பிரச்சினைகளில் ஓபிஎஸ், இபிஎஸ் பதவி விலகி இருக்க வேண்டும்.

1 Min Read
மா.சுப்பிரமணி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு மெலட்டூர், கபிஸ்தலம், திருவைக்காகாவூர், உமையாள்புரம் பகுதிகளில் அமைந்திருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய புற நோயாளிகள் பிரிவு கட்டிடம், செவிலியர் குடியிருப்பு கட்டிடம் மற்றும் புதிய துணை சுகாதார நிலைய கட்டிடங்களை  திறந்து வைத்தும், ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடத்திற்க்கு அடிக்கல் நாட்டி வைத்தும், மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார்.

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரம் மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்தி இறந்தவர்களுக்கு மட்டும் அவர்களின் குடும்பம் சூழ்நிலை கருதி நிவாரணத் தொகை வழங்கப்படுவதாகவும், ஜெயலலிதா இபிஎஸ், ஓபிஎஸ் முதலமைச்சராக இருந்த போதும் நிதி உதவி வழங்கியதாகவும் மனிதாபிமான அடிப்படையில் வழங்கும் நிவாரணத் தொகையை எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்  கொச்சைப்படுத்துவது நாகரீகமற்ற
செயல் எனவும்,

டாஸ்மார்க் கடைகளில் விற்கப்படும் மதுபானங்கள் கலால் வரி செலுத்தப்படாமல் விற்பனை செய்யப்படுகிறது என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அன்புமணி ராமதாஸ் வைத்திருப்பதாகவும்,

இப்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை பதவி விலக வேண்டும் என்று கேட்கிற இபிஎஸ் ஓபிஎஸ்.அதிமுக ஆட்சியில் கும்பகோணம் நீராடலில் இறந்தபோது தமிழக முதல்வராக ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவை, அப்போது இருந்த ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஏன் பதவி விலக சொல்லவில்லை எனவும்,

அதுபோல கொடநாடு கொலை வழக்கில் கொலை மற்றும் 5க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்த போது அப்போதும் கூட ஏன் யாரையும் பதவி விலக சொல்லவில்லை எனவும், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது டெல்டா மாவட்டத்தில் கஜா புயலின் மற்றும் பல்வேறு இடர்பாடுகள் நடைபெற்றன அப்போது எதற்காவது மக்களுக்கு ஆறுதல் சொன்னதோ அதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது உண்டா? என இபிஸ் யோசிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Share This Article
Leave a review