- தஞ்சாவூரில் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்டும் பெற்றோர்கள் குழந்தைகளை தங்களது மடியில் வைத்து நெல்லில் ‘ஆ ‘ எழுதி தங்களது குழந்தைகளின் கல்வியை துவங்கி வைத்தனர்.
தமிழகத்தில் வழக்கமாக ஜூன் மாதத்தில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் அதற்கு அடுத்தபடியாக ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி பண்டிகையின் போது தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர் அன்றைய தினம் தங்கள் குழந்தைகளை படிப்பை தொடங்கும் பட்சத்தில் கல்வியில் தங்களது குழந்தை சிறந்து விளங்கும் என்று நம்புகின்றனர்.
இந்த நிலையில் தஞ்சாவூரில் அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக உள்ளதால் பெற்றோர்கள் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர் காலை முதலே தங்கள் குழந்தைகளுடன் பள்ளிக்கு வந்து சேர்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள 100 ஆண்டுக்கு மேல் பழமையான அரசர் தொடக்கப்பள்ளியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/thambaram-intercity-express-train-service-in-trichy-member-of-sarliament-s-murasoli-waved-the-flag-and-inaugurated-it/#google_vignette
குழந்தைகளை தங்களது மடியில் வைத்து நெல்லில் ‘ஆ ‘ எழுதி தங்களது குழந்தைகளின் கல்வியை துவங்கி வைத்தனர். குழந்தைகளும் மிக உற்சாகமாக அரசு பள்ளிக்கு பெற்றோர்களுடன் வந்தனர்.