கரூர்,கோவையில் செந்தில் பாலாஜிஉதவியாளர் , டாஸ்மாக் மேற்பார்வையாளர், இல்லம்,அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் அமுலாக்கத்துறை சோதனை

0
118
அருண் அசோசியேட்

கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் , உதவியாளர் சங்கர் என்பவரின் வீடு மற்றும் அலுவலகம் உட்பட 4 இடங்களில்  அமலாக்கத்துறை சோதனை.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகியோர்களுக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த மே 26 ஆம் தேதி வருமான வரித்துறை சோதனை தொடங்கியது. அதனை தொடர்ந்து சில நாட்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. கரூரில் அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவரின் இளந்தளிர் பைனான்ஸ் என்ற நிதி நிறுவன அலுவலகம் மற்றும் அம்பாள் நகரில் உள்ள அவரது வீடு ஆகிய இரண்டு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கியுள்ளனர்.

போலீசார் பாதுகாப்பு

இதேபோல், சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான தனலட்சுமி செராமிக்ஸ் என்ற டைல்ஸ் கடை மற்றும் அவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு உள்ளிட்ட இரண்டு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது அமைச்சரின் உதவியாளர் சங்கர் மற்றும் தனியார் டைல்ஸ் கடை உரிமையாளர் வீடு உள்ளிட்ட நான்கு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது இப்பொகுதிகளில் மத்திய துணை ராணுவ படை வீரர்கள் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

கோவை

கோவையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கு சம்பந்தமாக அவருக்கு சொந்தமான இடங்கள், அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி  கோவையில் ராமநாதபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் சூப்ரவைசராக உள்ள முத்துபாலன் என்பவரது வீட்டில் கேரள பதிவு எண் கொண்ட வாகனத்தில் வந்த அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதே போன்று திருச்சி சாலையில் உள்ள அருண் அசோசியேட் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் அதன் உரிமையாளர் அருண் இல்லத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அருண் அசோசியேட் நிறுவனம் கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜின் குடும்பத்தினருக்கு பங்களா கட்டி கொடுத்து வரும் நிறுவனம் என கூறப்படுகிறது.

சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் மற்றும்  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here