நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து முதுமலைக்கு செல்லக்கூடிய
தேசிய நெடுஞ்சாலையில் இரவில் சாலையில் உலாவிய புலியால் கார் ஓட்டுநர் அச்சமடைந்தார்.!
முதுமலையிலிருந்து கூடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அடர்ந்த வனப் பகுதியாகும் மகள் மற்றும் இரவு நேரங்களில்
இச்சாலையில் யானை கரடி காட்டுமாடு புலி சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாடும் இதனால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று இரவு முதுமலையிலிருந்து கூடலூர் செல்லக்கூடிய சாலையில் புலி உலாவியது அப்போது சாலையில் சென்ற கார் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தினார்.
பின்பு ஒரு புறத்திலிருந்து மறுபுறம் செல்ல புலி சாலையில் அங்குமிங்கும் உலாவியது வாகன முகப்பு வெளிச்சத்தை கண்டவுடன் மீண்டும் வனப்பகுதிக்குள் ஓடியது.
இதை காரில் சென்றவர் அச்சத்துடன் வீடியோ பதிவு செய்துள்ளது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
புலி உலா, இதே இடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு யானை ஒன்று வாகனங்களை ஒரு மணி நேரத்திற்கு மேலாக வழிமறித்து நின்றது. தற்போது இரவு நேரத்தில் புலி உலாவியுள்ளது. எனவே இந்தப் பகுதிகளில் நிறுத்தி வனவிலங்குகளுக்கு இடையூறு செய்யும் விதமான செயல்களில் ஈடுபட வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்