தூத்துக்குடி அருகே உள்ள கூட்டாம்புளி கிராமத்தை சேர்ந்தவர் சந்தன ராணி 64 வயது ஆன இந்த மூதாட்டி இவரது வீட்டின் அருகே உள்ள லாரி டிரைவர் கனகராஜ் என்பவர் இந்த மூதாட்டிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் இடம் என பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த மூதாட்டி சந்தன ராணி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த போது கையில் மறைத்து வைத்திருந்த விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி தங்களின் கோரிக்கைக்கு மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து சமரச படுத்தி வெளியே அழைத்து வந்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
தனக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் லாரி டிரைவர் கனகராஜ் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து தனக்கு பாதுகாப்பு வழங்காவிட்டால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வந்து மீண்டும் தற்கொலை செய்து கொள்வேன் என ஆவேசமாக அவர் தெரிவித்தார்.
மேலும் கணவனை இழந்து தனிமையில் இருக்கும் பெண்ணுக்கு அரசு பாதுகாப்பு அளிக்காத காரணத்தால் தான் பெண்கள் தவறான வழியில்செல்வதாக அந்த மூதாட்டி குற்றம் சாட்டினார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு மனு கொடுக்க வரும் பொதுமக்கள் சோதனை செய்த பிறகு தான் மனு அளிக்க அனுமதி வழங்கப்படுகிறது. இருந்த போதிலும் கையில் எப்படி விஷத்தை எடுத்து வந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.