கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் ! -முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின உரை .

0
81
ஜார்ஜ் கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றும் தமிழ் நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்

இந்தியர்கள் அனைவரும்  விரும்புவது சமத்துவம் , சகோதரத்துவம் மற்றும் சமதர்ம இந்தியாவை தான் – மு.க.ஸ்டாலின் சுதந்திர தின உரை .

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அன்று தனது  சுதந்திர தின உரையில் அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப் பட்டியலில் இருக்கும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மக்களின் நேரடி தொடர்பைக் கொண்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளை மாநிலப் பட்டியலின் கீழ் கொண்டுவரவேண்டும் , குறிப்பாகக் கல்வியை கொண்டு வரப்பட வேண்டும் என்றார். மாநிலப் பட்டியலுக்குக் கல்வியை மாற்றினால் மட்டுமே, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) போன்ற தகுதித் தேர்வு முறையை முற்றிலுமாக ரத்து செய்ய முடியும் என்று பேசினார்.

நீட் தேர்வு தோல்வியால் ஜெகதீஸ்வரன் என்ற 19  வயது இளைஞனும் மற்றும் அவரது தந்தை செல்வசேகர் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, ஸ்டாலின் திங்கள்கிழமை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம், தமிழகத்திற்கு தகுதித் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மாநில மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆரம்ப காலங்களில் மாநில பட்டியலில் இருந்த கல்வி ,  காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்ட எமர்ஜென்சி காலத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அரசு கொண்டு வந்த 42வது திருத்தத்தின் மூலம் மாநிலப் பட்டியலில் இருந்து தேசிய பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது .

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காலை 9 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து ஸ்டாலின் தனது சுதந்திர தின உரையை ஆற்றினார்.

அவரது உறையில் 400 ஆண்டுகள் பழமையான புனித ஜார்ஜ் கோட்டையில் அதுவும் கலைஞர் நூற்றாண்டில் மூவர்ண கொடியை ஏற்றுவதில்  பெருமை அடைகிறேன் என்று தெரிவித்தார் .மேலும் அவர் பேசுகையில் தமிழ்நாடுதான் விடுதலை போராட்டத்திற்கான விதையை முதலில் விதைத்தது என்று கூறினார் .

இதனை கருத்தில் கொண்டு விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் ₹10,000-ல் இருந்து ₹11,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்  .

மேலும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாகவுள்ள  55,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும் மகளிர் உரிமைத் தொகை குறித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் , ஒரு கோடி மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது. உழைக்கும் பெண்களுக்கான அங்கீகாரமாக கலைஞர் மகளீர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. என்று தெரிவித்தார் .

இந்தியா என்பது எல்லைகளால் இல்லமால்  எண்ணங்களால் வடிவமைக்கப்பட வேண்டும். இந்தியர்கள் அனைவரும்  விரும்புவது சமத்துவம் , சகோதரத்துவம் மற்றும் சமதர்ம இந்தியாவை தான் .

சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது என்று அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here