தமிழகத்தில் 18 சதவீதத்திற்கு மேல் வசித்து வருகிற இஸ்லாமியர்களுக்கு மூன்று சதவீத இட ஒதுக்கீடு என்பது வெறும் கண்துடைப்பு தான். இதனால் இஸ்லாமியர்களுக்கு எந்த பயனும் இல்லை திமுக அரசு கொண்டு வந்த இந்த இட ஒதுக்கீடு ஒரு ஏமாற்று வேலை 18 சதவீத இட ஒதுக்கீட்டை விகிதாச்சார அடிப்படையில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
தமிழகத்தில் ஆங்காங்கே சிதறி வாழ்ந்து வருகின்ற பழங்குடி இருளர் ஆதி பண்டாரம் மலைவாழ் மக்கள் விகிதாச்சார அடிப்படையில் அரசு மற்றும் கல்வி வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தமிழகம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் வாழ்ந்து வருகிற மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் வழங்கி வருகின்ற உதவித்தொகையை சரியாக வழங்குவதில்லை என்று பல்வேறு மாற்றுத்திறனாளிகள் மனவேதனையில் வாழ்ந்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு முறையாக மாதம் தோறும் உதவித்தொகை வழங்க வேண்டும்.
திண்டிவனம் மற்றும் மயிலம் ரோடு பகுதிகளில் உள்ள அரசு மதுபான கடைகளால் பொதுமக்களுக்கும் மாணவ மாணவியர்களுக்கும் அதிக அளவு இடையூறு ஏற்படுகிறது. அதனால் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளை மாற்றி அமைக்க வேண்டும். உள்ளிட்ட ஆறு தீர்மானங்கள் முஸ்லிம் மக்கள் கழகம் சார்பில் இன்று விழுப்புரத்தில் நிறைவேற்றப்பட்டது.விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் முஸ்லிம் மக்கள் கழகத்தின் சார்பில் இன்று விழுப்புரம் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட தலைவர் ஷோக்கத் அலி தலைமை தாங்கினார். கூட்டத்தில் ச. சு ஜெய்னுதீன் முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவன தலைவர் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் உரையாற்றிய முஸ்லிம் மக்கள் கழகத்தின் தலைவர் மக்கள் படும் பல்வேறு இன்னல்களை பற்றியும் அதிலிருந்து எவ்வாறெல்லாம் அரசு தங்களை பாதுகாக்க வேண்டும் என்பது பற்றியும் பேசினார்.