ஆக்சிஜன் மாஸ்க்கிற்கு பதில் டீ கப் – அரசு மீது எடப்பாட …

Jothi Narasimman
1 Min Read
டீ கப் மாஸ்க்

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்க்கிற்கு பதில் டீ கப் பயன்படுத்திய விவகாரத்தில் அரசு மீது எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக தி நியூஸ் கலெக்ட் செய்தி வெளியிட்டிருந்தது.

- Advertisement -
Ad imageAd image

இது தொடர்பாக அவர் தனது பதிவில்,”காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிராண வாயு (ஆக்சிஜன்) சுவாசிக்கும் உபகரணத்திற்குப் பதிலாக “காகித கப்”பயன்படுத்துப்படுவதாக செய்திகள் வெளியிட்டு விடியா திமுக-வின் ஆட்சியில் அரசு மருத்துவமனைகளின் அவல நிலையை இன்றைய நாளிதழ்கள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன.,

120 கோடி ரூபாய்க்கு மருந்துகள், உபகரணங்கள் அரசு மருத்துவமனைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று வாய்ப்பந்தல் அறிக்கை வெளியிட்ட  சுகாதாரத்துறை அமைச்சர், அரசு மருத்துவமனைகளில் அடிப்படையாகத் தேவைப்படும் பிராண வாயு உபகரணங்களை கூட கொள்முதல் செய்யாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உயிர் காக்கும் பிராண வாயு உபகரணங்கள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குறைவின்றி கிடைக்க துரிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் விஷ காய்ச்சல், சிக்கன் குன்யா, டெங்கு போன்றவை பரவி மக்கள் அவதிப்படுவதால், சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்ற எனது யோசனையை ஏற்காமல் சுகாதாரத்துறை அமைச்சர் மழுப்பலான அறிக்கை ஒன்றை வெளியிட்டார், தமிழக மக்கள் உடல் நலன் காப்பதில் அரசியல் செய்யாமல், அஜாக்கிரதையாக இருந்து விடாமல் ,அடிப்படை தேவையான இந்த சிறப்பு முகாம்களையும் உடனடியாக தமிழ்நாடு முழுவதிலும் நடத்திட  இந்த விடியா அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.

Share This Article
Leave a review