தன்னை முன்னிலைப்படுத்தவே பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார் – எடப்பாடி பழனிச்சாமி.‌‌

2 Min Read
அதிமுக. எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக இன்று வலிமையாக உள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு பொது வாழ்க்கையில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்றவர், இப்போது மீண்டும் ஏதோ அதிமுகவை ஒன்றிணைப்பேன்

- Advertisement -
Ad imageAd image

‌‌சேலத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ” செயற்குழு கூட்டம் கூட உள்ளது. கர்நாடக தேர்தல் குறித்து  ஆலோசனை செய்ய உள்ளோம். கர்நாடக தேர்தல் குறித்து  முடிவெடுக்க உள்ளோம்.என்றார் தொடர்ந்து பேசிய அவர்‌‌

ஓபிஎஸ் விரக்தியின் விளம்பிற்குப் போய் இப்படிப் பேசிக் கொண்டிருக்கிறார். அவரது பேச்சிற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. முதலில் தர்ம யுத்தம் என்றார். இப்போது மீண்டும் மற்றொரு தர்ம யுத்தம் என்கிறார். அவரது தர்ம யுத்தம் எல்லாம் என்ன ஆனது என்று அவரை சுற்றி இருக்கும் அனைவருக்கும் தெரியும். நாட்டு மக்களுக்கும், தொண்டர்களுக்கும் தெரியும்.

அதிமுக. எடப்பாடி பழனிச்சாமி

‌‌அதிமுக இன்று வலிமையாக உள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு பொது வாழ்க்கையில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்றவர், இப்போது மீண்டும் ஏதோ அதிமுகவை ஒன்றிணைப்பேன் என்றெல்லாம் சொல்லி வருகிறார். சட்டசபைத் தேர்தலில் எங்களால் எங்கும் வெல்ல முடியாது என்று நினைத்து அப்படிச் சொன்னார். ஆனால், நாங்கள் 70 இடங்களுக்கு மேல் வென்றோம். இப்போது அதிமுகவுக்கான ஆதரவும் அதிகரித்தே வருகிறது. அதன் காரணமாகவே அவர் இப்படிப் பேசி வருகிறார்’’ என்றார். அண்ணாமலை குறித்து கேள்வி எழுப்பியதற்கு, “அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். கற்பனை கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. ஏங்க அவரைப் பற்றியே பேசிக் கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் இப்படிப் பேசிப் பேசி தான் அவர் பெரிய ஆள் ஆகியிருக்கிறார். அவரைப் பற்றியே பேச வேண்டாம். நான் கட்சிக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறது.

‌‌கட்சியில் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியும். அவர் சும்மா பேட்டி கொடுத்து பெரிய ஆள் ஆக வேண்டும் என நினைக்கிறார். தயவு செய்து அவர் குறித்து எந்தவொரு கேள்வியும் கேட்க வேண்டாம். அரசியலில் இருப்பவர்களுக்கு அடிப்படை தன்மை தெரிந்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க நான் தயாராகவே இருக்கிறேன். அதை விட்டு விட்டு தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவே அவர் இப்படிப் பேசி வருகிறார். அவர் ஏதாவது ஒன்றைப் பேசிவிடுகிறார். அதன் பின்னர் எங்களைப் போலத் தலைவர்கள் அதற்குப் பதிலளிக்க வேண்டி இருக்கிறது. முதிர்ந்த அரசியல்வாதி கருத்து குறித்துக் கேட்டால் பதில் சொல்லலாம். அவர் குறித்து எந்தவொரு கேள்வியும் கேட்க வேண்டாம்” என்று தெரிவித்தார்.

மேலும் தன்னை முன்னிலைப்படுத்தவே பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்‌‌

Share This Article
Leave a review