ஆடிப்பெருக்கை முன்னிட்டு பூ விலை உயர்வு.! வியாபாரிகள் அதிர்ச்சி.!

0
41
பூ விலை உயர்வு

நாளை ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நிலக்கோட்டை மலர் சந்தைகளில் பூக்களின் விலை அதிகரிப்பு ஒரு கிலோ மல்லிகை பூ 900 கடந்து விற்பனை. இதர பூக்களின் விளையும் அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை , திண்டுக்கல் மற்றும் கொடைரோடு ஆகிய பகுதிகளில் மலர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த மலர் சந்தையில் இருந்து அதிக அளவில் தென் மாவட்டங்கள் , வட மாவட்டங்கள் மட்டுமல்லாது அண்டை மாநிலமான கேரளாவிற்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக நிலக்கோட்டை மலர் சந்தை என்பது தென் தமிழகத்தின்  பிரசித்தி பெற்ற மலர் சந்தைகளில் ஒன்றாகும். சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 40% மலர் சாகுபடி மட்டுமே செய்யப்பட்டு வரக்கூடிய நிலையில் அதிக அளவில் தமிழகத்தின் பல பகுதிகள் மட்டுமல்லாது கேரள மாநிலத்திற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதோடு, வெளிமாநிலங்களுக்கும் விமானம் மூலம் பூக்களை ஏற்றுமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாளை  ஆடிப்பெருக்கு(18) விழாவை முன்னிட்டு நிலக்கோட்டை மலர் சந்தையில் பூக்களின் வரத்து வெகுவாக உயர்ந்துள்ளது .பூக்களை  கொள்முதல் செய்வதற்காக உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மலர் சந்தை பகுதியில் குவிந்துள்ளனர் .

நிலக்கோட்டை மலர் சந்தையை பொருத்தமட்டில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக கிலோவிற்கு 250 – 300 வரை விற்பனையானது. இன்று ஒரே நாளில் கிலோ ஒன்றுக்கு மல்லிகை பூ – 850 – 900த்துக்கு விற்பனையானது.மேலும் கிலோ ஒன்றுக்கு
முல்லை – 450 , ஜாதி பூ – 400 , சம்பங்கி பூ – 200 , கனகாம்பரம் – 350  , பட்டன் ரோஸ் – 200 , சாதா ரோஸ் – 220, செண்டு மல்லி – 100, கோழிக்கொண்டை  – 100 , மரிக்கொழுந்து – 120 , துளசி – 50 என விலை
நிர்ணயம் செய்யப்பட்டு பூக்கள் விற்பனையாகி வருகிறது.

விவசாயிகளிடம் கேட்டறிந்தபோது இந்த விலை உயர்வு எதிர்பார்த்த ஒன்றுதான் . பெரிய அளவில் இல்லாமல் கணிசமான அளவில் தான் லாபம் கிடைக்கும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here